ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

விராட் கோலி ரூம் வீடியோ : மன்னிப்பு கேட்ட பெர்த் ஹோட்டல்.. ஊழியர்கள் பணிநீக்கம்

விராட் கோலி ரூம் வீடியோ : மன்னிப்பு கேட்ட பெர்த் ஹோட்டல்.. ஊழியர்கள் பணிநீக்கம்

விராட் கோலி ரூம் வீடியோ

விராட் கோலி ரூம் வீடியோ

Virat Kohli Room Video | விராட் கோலி ரூம் வீடியோ வெளியான விவகாரத்தில் ஹோட்டல் நிர்வாகம் மன்னிப்பு கோரியது உடன் வீடியோ எடுத்த ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    டி20 உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. சூப்பர் 12 போட்டிகளில் விளையாடி வரும் இந்திய அணி நேற்று தென்னாப்பிரிக்கா அணி உடன் மோதியது. இந்த போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை முன்னிட்டு இந்திய வீரர்கள் கிரவுன் பெர்த் ஹோட்டலில் தங்கி உள்ளனர்.

    இந்த ஹோட்டலில் விராட் கோலியின் அறையில் ரசிகர் ஒருவர் அனுமதியின்றி நுழைந்து அவரின் ரூமை வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ விராட் கோலியின் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த வீடியோவால் கோபமடைந்த விராட் கோலி தனது இன்ஸ்டாகிராமில் ரசிகரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

    அதில், ரசிகர்கள் அவர்களுக்கு பிடித்த வீரர்களை பார்க்க மிகவும் சந்தோஷப்படுவார்கள் என்று எனக்கு நன்றாக தெரியும். அவர்களின் எண்ணங்களை நான் எப்போதும் மதிக்கிறேன்.ஆனால் என் அறையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று என்னை அதிர்ச்சியில் ஆழ்த்திருக்கிறது. இதன் மூலம் என்னுடைய தனிப்பட்ட சுதந்திரம் பறிக்கப்பட்டு இருப்பதாகவே கருதுகிறேன்.




     




    View this post on Instagram





     

    A post shared by Virat Kohli (@virat.kohli)



    ஹோட்டலில் தங்கும் போது என்னுடைய அறையில் கூட எனக்கு தனிப்பட்ட சுதந்திரம் இல்லை என்றால் பிறகு எனக்கு வேறு எங்கு கிடைக்கும். இதுபோன்ற செயலை நான் எப்போதும் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். இது என்னுடைய தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடும் விஷயமாகும். ரசிகர்கள் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை மதிக்க நான் கோரிக்கை விடுக்கிறேன். என் தனிப்பட்ட வாழ்க்கையை உங்கள் பொழுதுபோக்குக்கு ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டாம் என்றுள்ளார்.

    Also Read : உங்கள் படுக்கை அறையில் நடந்திருந்தால்... விராட் ரூம் வீடியோவை வெளியிட்ட ரசிகரை கடுமையாக திட்டிய அனுஷ்கா சர்மா

    இந்நிலையில் விராட் கோலி ரூம் வீடியோ வெளியான விவகாரத்தில் ஹோட்டல் நிர்வாகம் மன்னிப்பு கோரி உள்ளது. அந்த வீடியோவை எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. மேலும் அந்த வீடியோவை சோசியல் மீடியாவிலிருந்து உடனடியாக டெலிட் செய்தது உடன் இதுதொடர்பாக விசாரணையும் நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Published by:Vijay R
    First published:

    Tags: T20 World Cup, Virat Kohli