இப்படி ஒரு தோனி ரசிகர பார்த்திருக்கவே முடியாது: அவரோட பாசத்த நீங்களே பாருங்க!

MS Dhoni | West Bengal | Shambhu Bose | தோனியை சந்திக்க வேண்டுமென்ற கனவு என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக நிறைவேறும். அன்று அவரிடம் நான் மிகப்பெரிய கோரிக்கையை அவர்முன் வைப்பேன்.

இப்படி ஒரு தோனி ரசிகர பார்த்திருக்கவே முடியாது: அவரோட பாசத்த நீங்களே பாருங்க!
Hotel MS Dhoni
  • News18
  • Last Updated: June 12, 2019, 8:30 PM IST
  • Share this:
நீங்கள் தோனி ரசிகரா? அப்போ இந்த ஹோட்டலுக்கு போங்க; சாப்பிடுங்க; பணம் கொடுக்க தேவையே இல்ல; சாப்பிட்டு நீங்க வெளியே போயிட்டே இருக்கலாம். மேற்குவங்கம், அலிப்பூர்துவாரில் ஷாம்பு போஸ் தான் இதுபோன்ற அசத்தல் ஆஃபருடன் கூடிய ஹோட்டலை நடத்தி வருகிறார்.

தோனியின் தீவிர ரசிகர் ஷாம்பு போஸ். 32 வயதான ஷாம்பு நடத்தி வரும் ஹோட்டலுக்கு தோனி பெயரை தான் வைத்துள்ளார். இங்கு வருபவர்கள் தோனி ரசிகராக இருந்தால் அவர் சாப்பிட்டதற்கு பில் வாங்குவதே இல்லையாம். சிறு வயதில் இருந்தே தோனியின் தீவிர ரசிகராக இருந்துள்ளார் ஷாம்பு.

துர்கா பூஜை வந்தால் அவருடைய ஹோட்டல் 2 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. இங்கு இருக்கும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஹோட்டல் எம்.எஸ்.தோனி பற்றி தெரியுமாம். இங்கு வந்து சாப்பிடுபவர்கள் அவர் விளையாடும் ஸ்டைல் குறித்து பேசிக் கொண்டே இருப்பார்கள் என்கிறார் ஷாம்பு.


தோனியிடமிருந்து நிதானம், பொறுப்பு ஆகியவற்றைக் கற்றுக்கொண்டேன். வாழ்நாளில் அவரை ஒரு முறையாவது நேரில் பார்க்க வேண்டும் என்பதே என்னுடைய கனவு. அவரது ஆட்டத்தை மைதானத்தில் சென்று பார்க்க வேண்டுமென்ற ஆசை உள்ளது. ஆனால் அதற்கான பண வசதி என்னிடம் இல்லை என கவலை தெரிவித்துள்ளார்.

தோனியைச் சந்திக்க வேண்டுமென்ற கனவு என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக நிறைவேறும். அன்று அவரிடம் நான் மிகப்பெரிய கோரிக்கையை அவர்முன் வைப்பேன். என்னுடைய ஹோட்டலுக்கு வந்து அவர் சாப்பிட வேண்டுமென்பது தான். எனக்குத் தெரியும் அவருக்கு பிடித்த உணவு சாப்பாடும், மீனும் தான். அதை அவருக்கு நான் கொடுப்பேன் என்கிறார் ஷாம்பு போஸ்.

தோனியின் சிறப்பான ஆட்டத்தால் இந்த முறையும் இந்திய அணி தான் கோப்பையை வெல்லும். 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையை இந்திய அணி வென்றதை என்னால் மறக்கவே முடியாது.அப்போது நான் டீக்கடை நடத்தி வந்தேன். இலங்கைக்கு எதிரான போட்டியில் தோனி சிக்ஸர்  அடித்து போட்டியை முடித்தார். அதை நான் எனது நண்பர்களுடன் அமர்ந்து உற்சாகமாக பார்த்து ரசித்தேன். என் வாழ்நாளில் மறக்க முடியாத தினமாக அது இருந்தது என்று நெகிழ்கிறார் ஷாம்பு போஸ்.

Also Watch

First published: June 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading