ஏப்ரல் 15-ல் ஐ.பி.எல் தொடங்குவதில் தற்போதைக்கு உறுதியாக உள்ளோம் - சவுரவ் கங்குலி

CoronaVirus | IPL 2020 | "ரசிகர்களின் பாதுகாப்பிற்கே முன்னுரிமை அளிக்கப்படும்"

ஏப்ரல் 15-ல் ஐ.பி.எல் தொடங்குவதில் தற்போதைக்கு உறுதியாக உள்ளோம் - சவுரவ் கங்குலி
சவுரவ் கங்குலி
  • Share this:
ஐபிஎல் போட்டியை விட மக்களின் பாதுகாப்புதான் முக்கியம் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிசிசிஐ தலைவர் கங்குலி ஐபிஎஸ் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறித்து விளக்கமளித்தார். முதலில் ரசிகர்களின் பாதுகாப்பிற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்ற வகையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், இது தற்போதைய முடிவுதான் எனவும் தெரிவித்தார்.


இதனைத் தொடர்ந்து, கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து கவனித்து வருவதாகத் தெரிவித்த அவர், தற்போதைக்கு வரும் ஏப்ரல் 15-ம் தேதி போட்டிகள் தொடங்குவதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Also see:
First published: March 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்