50 ரன்களோ, 60 ரன்களோ எதுவாக இருந்தாலும் சரி, சதம் ஒன்றுதான் பங்களிப்பல்ல, மேட்ச் வின்னிங் பங்களிப்பு எதுவாக இருந்தாலும் விராட் கோலியிடமிருந்து இதைத்தான் எதிர்பார்க்கிறோம் என்று விராட் கோலி குறித்து தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி நாளை ஜூலை 1ம் தேதி இங்கிலாந்தின் கோட்டையான எட்ஜ்பாஸ்டனில் அவர்களைத் தகர்க்க தயாராகி வரும் நிலையில் இங்கிலாந்து அணி தன் புதிய ஆக்ரோஷ முகத்தை இந்தியாவின் உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சுக்கு முன் காட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், இந்தியாவின் பிரச்சனை, பயம் பேட்டிங்தான்.
இந்நிலையில் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட் கூறும்போது, “எப்போதும் மூன்றிலக்க எண்ணில் குறியில்லை. கேப்டவுனில் கடினமான சூழ்நிலையில் 79 எடுத்தார் கோலி, அது ஒரு நல்ல இன்னிங்ஸ். இதை சதமாக மாற்றவில்லை, ஆனால் அது நல்ல ஸ்கோர்.
அவர் சதங்களாக எடுத்து தனக்கான உயர்தரத்தை வைத்துள்ளார், அதனால் மக்கள் கோலி என்றால் சதம் என்று நினைக்கின்றனர், சதத்துக்குக் கீழ் எதுவும் தேறாது என்று நினைக்கின்றனர். ஆனால் என்னைப் பொறுத்தவரை அவரிடமிருந்து மேட்ச் வின்னிங் பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். அது 50 ஆக இருக்கலாம் அல்லது 60 ரன்களாக இருக்கலாம்.
கிரிக்கெட்டில் எந்த வீரருக்கும் இப்படிப்பட்ட காலக்கட்டம் இருக்கவே செய்யும். இதற்காக உத்வேகம் போய் விட்டது என்று அர்த்தமல்ல, விராட் கோலியை பொறுத்தவரை அவருக்கு ஏதோ ஆசையில்லை, உத்வேகம் இல்லை என்று கூற முடியாது.
அவர் 30ஐ தாண்டியிருந்தாலும் அதன் சரியான பக்கத்தில்தான் இருக்கிறார். அவரைப்போன்ற ஒரு கடினமான உழைப்பாளியை நான் பார்த்ததில்லை. அவருக்கு தீரா வேட்கை இருக்கிறது, அணுகுமுறையில் எந்த வித மாற்றமும் அவரிடம் இல்லை.
பயிற்சி ஆட்டத்தில் கூட லீஷயருக்கு எதிராக அவர் நம் பவுலர்களென்றாலும அவர்களை ஆடுவதில் ஆர்வமாகவே இருந்தார், பும்ரா, பிரசித் கிருஷ்ணாவையெல்லாம் ஆட வேண்டும் என்ற ஆசையும் வேகமும் அவரிடம் இருந்தது. ஒரு அவுட் ஆஃப் பார்மிலிருந்து வெளியே வர என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதைச் செய்து வருகிறார், இதிலிருந்து வெளியே வருவார் என்று நம்புவோம்” என்றார் ராகுல் திராவிட்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India Vs England, Rahul Dravid, Virat Kohli