ரசிகர்கள் என் குழந்தைகளையும் அவதூறாக பேசுகிறார்கள்... தோனியை அணியிலிருந்து கழற்றி விட்ட வீரர் கதறல்

MS Dnoni | கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பந்த் அடங்கிய 14 பேர் கொண்ட அணியை அறிவித்தார் ஆகாஷ் சோப்ரா.

ரசிகர்கள் என் குழந்தைகளையும் அவதூறாக பேசுகிறார்கள்... தோனியை அணியிலிருந்து கழற்றி விட்ட வீரர் கதறல்
ஆகாஷ் சோப்ரா - தோனி
  • Share this:
இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அறிவித்த டி20 உலகக் கோப்பை அணியில் தோனி இடம்பெறததால் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் அணிக்கு ஐசிசி-ன் மூன்று விதாமான உலகக் கோப்பையும் பெற்று தந்தவர் என்ற சாதனை படைத்த ஒரே கேப்டன். கிரிக்கெட்டில் தோனிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு பின் தோனி இந்திய அணியில் இடம்பெறவில்லை. ஐ.பி.எல் தொடரில் அவரது ஆட்டத்தை பார்க்க ஆர்வமாக இருந்த ரசிகர்களுக்கு கொரோனா காரணமாக ஏமாற்றமே மிஞ்சியது.


ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியில் தோனி கட்டாயம் இடம்பிடிப்பார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சேப்ரா டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் உத்தேச அணியை அறிவித்தார். அதில் தோனி இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பந்த் அடங்கிய 14 பேர் கொண்ட அணியை அறிவித்தார்.

இதனால் கோபமடைந்த தோனி ரசிகர்கள் ஆகாஷ் சோப்ராவை கடுமையாக சாடி வருகின்றனர். இது தொடர்பாக ஆகாஷ் சோப்ரா கூறுகையில், “நான் கடந்த ஒரிரு நாட்களாக எனது சமூக வலைத்தள கணக்கை மூடிவிட்டேன். ரசிகர்கள் என்னையும் என் குடும்பத்தினரையும் அவதூறாக பேசி வருகிறார். அவர்கள் என் குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை. நான் அவ்வாறு கூறியதற்கு தயவு செய்து என்னை மன்னியுங்கள்“ என்றுள்ளார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading