Home /News /sports /

இலங்கையில் குழந்தைகளுக்காக பெற்றோர்கள் பட்டினி கிடக்கின்றனர்- பாட் கமின்ஸ் வேதனை

இலங்கையில் குழந்தைகளுக்காக பெற்றோர்கள் பட்டினி கிடக்கின்றனர்- பாட் கமின்ஸ் வேதனை

இலங்கை மக்களுக்காக பாட் கமின்ஸ் வேதனை

இலங்கை மக்களுக்காக பாட் கமின்ஸ் வேதனை

இலங்கையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவு வேண்டும் என்பதற்காக தாங்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் சாப்பிடுகின்றனர் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கமின்ஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

    இலங்கையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவு வேண்டும் என்பதற்காக தாங்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் சாப்பிடுகின்றனர் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கமின்ஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸ், இலங்கையில் எழுந்துள்ள கொந்தளிப்புகளுக்கு மத்தியில் அவரும் மற்ற வீரர்களும் நன்றாக இருக்கிறார்களா என்று அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து பல தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. ஆஸி அணி பாதகமான எதையும் எதிர்கொள்ள வேண்டியதில்லை என்றாலும், இலங்கை மக்கள் அனுபவித்து வரும் சோதனையை கம்மின்ஸ் வெளிச்சம் போட்டுக் காட்டினார்.

    “நேற்று நடந்த போராட்டம், அதில் இருந்து உங்களால் தப்ப முடியாது. எங்களுக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து மெசேஜ்களாக குவிந்து வந்தன. அதாவது, 'எப்படி இருக்கிறது? நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.’ என்று செய்திகள் அங்கிருந்து வந்தபடியே இருந்தன. நாங்கள் முற்றிலும் நன்றாக இருக்கிறோம்,” என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட்ட வீடியோவில் கம்மின்ஸ் கூறினார்.

    கம்மின்ஸ் ஹோட்டலில் உள்ள ஊழியர் ஒருவருடன் உரையாடியுள்ளார் அப்போது இலங்கையில் மக்கள் படும் பிரச்சனைகளை தான் அறிந்து கொண்டதாகவ தெரிவித்தார்.

    "ஹோட்டலைச் சுற்றியுள்ள சில ஊழியர்களுடனும் கார் ஓட்டுநர்களுடனும் பேசினேன். அவர்கள் கூறியது வேதனையாக இருந்தது. அவர்கள் ஒரு நாள் சாப்பிடுகிறார்கள், ஒரு நாள் சாப்பிடாமல் பட்டினி கிடக்கின்றார்கள். எதற்கு என்றால் தங்கள் சாப்பாட்டை குழந்தைகளுக்காக தியாகம் செய்கின்றனர்.இது உண்மையில் மிகவும் வேதனையானது.

    இலங்கை மக்களின் இந்த நிலை எங்கள் அணி மீது தாக்கம் செலுத்தியது, நாங்கள் இதைப்பற்றி பேசினோம். நாம் எப்படி பயணிக்கிறோம் என்பதே எங்களுக்கு ஆச்சரியாமகத்தான் இருந்தது. இலங்கையில் வெறும் கிரிக்கெட் மட்டும் ஆடுவதை விட இந்தப் பயணம் அதற்கு மேலான ஒன்றை எங்களுக்கு அறிவுறுத்தியது.

    இவ்வாறு கூறினார் பாட் கமின்ஸ்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Pat Cummins, Sri Lanka political crisis

    அடுத்த செய்தி