கேப்டன் நீக்கப்பட்டதால் கொண்டாட்டமா...? வீடியோவுக்காக மன்னிப்பு கேட்டது பாக். கிரிக்கெட் வாரியம்

கேப்டன் நீக்கப்பட்டதால் கொண்டாட்டமா...? வீடியோவுக்காக மன்னிப்பு கேட்டது பாக். கிரிக்கெட் வாரியம்
சர்பராஸ் அகமது
  • News18
  • Last Updated: October 20, 2019, 11:00 AM IST
  • Share this:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து சர்பராஸ் அகமது நீக்கப்பட்ட நிலையில், அந்த அணியின் வீரர்கள் நடனமாடும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மன்னிப்பு கோரியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது, சமீபத்தில் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனை அடுத்து, வீரர்கள் நடனமாடும் வீடியோ ஒன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டது.

கேப்டன் மாற்றப்பட்டதை கொண்டாடும் விதமாக அந்த வீடியோ இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.
அது டி-20 உலகக்கோப்பை தொடருக்கான விளம்பர வீடியோ என்றும், தவறான நேரத்தில் வெளியிடப்பட்டதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Also See...

First published: October 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்