• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • நியூசிலாந்து அணி செக்யூரிட்டிகளுக்கு ரெண்டு வேளை பிரியாணி போட்டும் பறந்துட்டாங்களே- பாகிஸ்தான் புலம்பல்

நியூசிலாந்து அணி செக்யூரிட்டிகளுக்கு ரெண்டு வேளை பிரியாணி போட்டும் பறந்துட்டாங்களே- பாகிஸ்தான் புலம்பல்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

நியூசிலாந்து வீரர்களுக்காக அப்பழுக்கற்ற துல்லியப் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு பணியாளர்களுக்கு ரெண்டு வேளையும் மூக்குப்பிடிக்க சாப்பிட பிரியாணி போட்ட செலவு மட்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.27 லட்சமாம்!

  • Share this:
    ராவல்பிண்டி ஸ்டேடியத்துக்கு வெளியே தீவிரவாத தாக்குதல் நடைபெறலாம் என்ற தகவலையடுத்து நியூசிலாந்து அணி பாகிஸ்தான் தொடரை ரத்து செய்து விட்டு நாடு திரும்பியது. இதனால் ரசிகர்கள், தொலைக்காட்சிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது ஒருபுறம் இருக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு பிரியாணி உள்ளிட்ட செலவுகளும் லட்சக்கணக்கில் ஆகியுள்ளது.

    நியூசிலாந்து வீரர்களுக்காக அப்பழுக்கற்ற துல்லியப் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு பணியாளர்களுக்கு ரெண்டு வேளையும் மூக்குப்பிடிக்க சாப்பிட பிரியாணி போட்ட செலவு மட்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.27 லட்சமாம்! 5 எஸ்பிக்கள், 500 போலீஸ் அதிகாரிகள் இதுபோக பாகிஸ்தான் ராணுவமும் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவர்களுக்கான ரெண்டு வேளை பிரியாணி பில் மட்டும் ரூ.27 லட்சம் என்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

    நியூசிலாந்து கிரிக்கெட் தொடரிலிருந்து விலகியதையடுத்து இங்கிலாந்தும் விலகுவதாக அறிவித்தது, இதனையடுத்து ஒருபுறம் பாகிஸ்தான் கிரிக்கெட் இப்படி ஆவது குறித்த வருத்தம் வேதனை இருந்தாலும் பலருக்கும் இந்தசம்பவங்கள் நகைச்சுவை மீம்கள் உற்பத்தி ஸ்தலமாக உள்ளன. மற்ற நாடுகளில் பிட்ச் இன்ஸ்பெக்‌ஷன் நடக்கிறது என்றால் பாகிஸ்தானில் வெடிகுண்டு மோப்ப நாய்கள் மைதானத்தில் இன்ஸ்பெக்‌ஷன் செய்கின்றன என்று மீம்கள் கலாய்ப்பு எகிறி வருகின்றன. இப்போது இந்த பிரியாணி நகைச்சுவை வேறு என்ன மாதிரியான மீம்களை கிளப்பும் என்று தெரியவில்லை.

    இதற்கிடையே ஷோயப் அக்தர் பாகிஸ்தான் அணி இந்த கோபத்தையெல்லாம் டி20 உலகக்கோப்பையில் காட்ட வேண்டும் நியூசிலாந்து அணியைப் போட்டு சாத்த வேண்டும் தோற்கடிக்க வேண்டும் என்று ஆவேசமாகப் பேசியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய சேர்மன் ரமீஸ் ராஜா நாங்களும் இனி வேலையைக் காட்டுவோம் என்று காட்டமாகக் கூறி வருகிறார்.

    Also Read: டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்தை சும்மா விடக்கூடாது- அக்தர் ஆவேசம்

    என்ன கூறினாலும் கிரிக்கெட்டில் இந்தியா, இங்கிலாந்து ஆஸ்திரேலிய வாரியங்களின் பணபலத்தையும் அதிகாரப் பலத்தையும் எதிர்த்துப்போராட முடியுமா என்ன?

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: