ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு இடைக்கால தலைவராக அப்ரிடி நியமனம்…

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு இடைக்கால தலைவராக அப்ரிடி நியமனம்…

ஷாகித் அப்ரிடி

ஷாகித் அப்ரிடி

அப்ரிடி தலைமையிலான இடைக்கால தேர்வு குழுவில் அப்துல் ரசாக், இப்திகார் அன்ஜும் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணி கடந்த சில தொடர்களில் படுதோல்வியைச் சந்தித்து வரும் நிலையில், அவருக்கு இந்த புதிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தேர்வுக்குழு தலைவர் பொறுப்பில் இருந்த முகமது வாசிம் மற்றும் அவருக்கு கீழ் செயல்பட்டு வந்த குழு ஆகியவை நீக்கப்பட்டுள்ளன. தற்போது நியமிக்கப்பட்டுள்ள அப்ரிடி தலைமையிலான இடைக்கால தேர்வு குழுவில் அப்துல் ரசாக், இப்திகார் அன்ஜும்  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இடம்பெறும் பாகிஸ்தான் அணி வீரர்களை மட்டுமே அப்ரிடி தலைமையிலான தேர்வுக்குழு நியமனம் செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : 2ஆவது இடத்திற்கு முன்னேறியது இந்திய அணி

இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது-

எந்த வித அச்சமும் இன்றி, அதிரடியாக விளையாடக்கூடிய ஆட்டக்காரராக அப்ரிடி இருந்து வருகிறார். அவருக்கு 20 ஆண்டுகால கிரிக்கெட் அனுபவம் உள்ளது. ஒருநாள், 20 ஓவர் போட்டி மற்றும் டெஸ்ட் என அனைத்து பார்மேட்களிலும் அவர் நல்ல அனுபவத்தை பெற்றிருக்கிறார். தொடர்ந்து இளம் வீரர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.

இந்த காரணங்களால் அவரை தேர்வு குழு இடைக்கால தலைவராக நியமித்துள்ளோம். அவரை விடவும் சிறந்த நபர் இல்லை என்பதை உணர்ந்துள்ளோம். அவருடைய அனுபவ அறிவு பாகிஸ்தான் தேசிய அணிக்கு உதவியாக அமையும். அத்துடன் தகுதிவாய்ந்த வீரர்களை தேசிய அணியில் இடம் பெறச் செய்ய அப்ரிடியின் கிரிக்கெட் அனுபவம் உதவியாக இருக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

INDvsBan : அஸ்வின்- அக்சர் படேல் அதிரடி : டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி!

புதிய பொறுப்பு குறித்து அப்ரிடி அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது-

பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ள தேர்வுக்குழு தலைவர் பொறுப்பை, மிகப் பெரும் கௌரவமாக நான் கருதுகிறேன். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் மிகச்சிறந்த வீரர்களை பாகிஸ்தான் தேசிய அணிக்காக நாங்கள் தேர்வு செய்வோம். மீண்டும் வெற்றிப் பாதையில் பயணிப்போம். விரைவில் தேர்வு குழுவின் பணிகள் தொடங்கும். என்று கூறியுள்ளார்

First published:

Tags: Cricket