முகப்பு /செய்தி /விளையாட்டு / பேட் கம்மின்ஸ் இந்தியா திரும்புவதில் சிக்கல்… ஆஸி. அணியின் கேப்டன் மாற்றப்பட வாய்ப்பு

பேட் கம்மின்ஸ் இந்தியா திரும்புவதில் சிக்கல்… ஆஸி. அணியின் கேப்டன் மாற்றப்பட வாய்ப்பு

பேட் கம்மின்ஸ்

பேட் கம்மின்ஸ்

மார்ச் 1 ஆம் தேதி 3 ஆவது டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பாக கம்மின்ஸ் இந்தியாவுக்கு வருவார் என்று கூறப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சொந்த அலுவல் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருக்கு அந்நாட்டு கிரிக்கெட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், இந்தியா திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மாற்றப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரிலும், 2ஆவது டெஸ்ட் போட்டி டெல்லியிலும் நடந்து முடிந்துள்ளன. இவை இரண்டிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் முன்னணி அணியாக இருக்கும் ஆஸ்திரேலிய அணியால் இந்தியாவுடனான டெஸ்ட் போட்டிகளில் 3 நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இதற்கிடையே, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் சொந்த ஊருக்கு சில நாட்களுக்கு முன்பாக கிளம்பிச் சென்றுள்ளார். மார்ச் 1 ஆம் தேதி 3 ஆவது டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பாக கம்மின்ஸ் இந்தியாவுக்கு வருவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், அவர் இந்தியா திரும்புவதற்கு மேலும் சில நாட்கள் ஆகும் என தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதேபோன்று, அவர் அடுத்த 2 போட்டிகளில் விளையாட மாட்டார் என்றும், கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் ஆஸ்திரேலிய அணியின் அடுத்த கேப்டன் விரைவில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, பேட் கம்மின்ஸுக்கு மற்றுமொரு அதிர்ச்சியாக கடந்த 4 ஆண்டுகளாக அவர் தக்கவைத்துக் கொண்டிருந்த நம்பர் ஒன் டெஸ்ட் பவுலர் என்ற  பெருமையை இங்கிலாந்தை சேர்ந்த 40 வயது ஆட்டக்காரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தட்டிப் பறித்துள்ளார்.

First published:

Tags: Australia, Cricket