கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித்துக்கு அடுத்ததுதான் விராட் கோலி: தன் டெஸ்ட் லெவன் பற்றி பாட் கமின்ஸ்

விராட் கோலி

தனது சிறந்த டெஸ்ட் அணியில் கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி ஆகிய 3 பேருக்கும் இடமுண்டு என்று தெரிவித்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கமின்ஸ் களமிறங்கும் வரிசையில் பொடி வைத்தார்.

 • Share this:
  தனது சிறந்த டெஸ்ட் அணியில் கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி ஆகிய 3 பேருக்கும் இடமுண்டு என்று தெரிவித்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கமின்ஸ் களமிறங்கும் வரிசையில் பொடி வைத்தார்.

  பாட் கமின்ஸ் உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராவார், இவர் இன்றைய 4 பெரிய வீரர்களான கோலி, வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோருக்கு வீசியுள்ளார்.

  வில்லியம்சன் இப்போது டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 1 வீரர் ஆவார். ஒருநாள் கிரிக்கெட்டில் வில்லியம்சனை இருமுறை அவுட் ஆக்கியுள்ளார் பாட் கமின்ஸ். ஆனால் கோலியை 7 முறை அவுட் ஆக்கியுள்ளார்.

  கேன் வில்லியம்சன்


  இந்நிலையில் தன் டெஸ்ட் அணியில் வில்லியம்சன், கோலி, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கு இடமுண்டு என்று கூறிய பாட் கமின்ஸ், டவுன் ஆர்டரில் 3ம் நிலையில் வில்லியம்சனையும் 4ம் நிலையில் ஸ்மித்தையும் 5ம் நிலையில் கோலியையும் இறக்குவேன் என்றார்.

  இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி சவுத்தாம்ப்டனில் ஜூ 18ம் தேதி நடைபெறுகிறது.

  இது தொடர்பாக பாட் கமின்ஸ் கூறும்போது, “இரு அணிகளும் 2 மாதகாலமாக டெஸ்ட் போட்டிகள் எதிலும் ஆடவில்லை. இது ஒரே டெஸ்ட் கொண்ட பைனல், எனவே எது வேண்டுமானாலும் நடக்கலாம். நான் எல்லைக்கோட்டில் அமர்ந்து வேடிக்கை மட்டும் பார்ப்பேன். ஆனால் இங்கிலாந்து சூழ்நிலைமைகள் இந்திய அணியை விட நியூசிலாந்து அணிக்குச் சாதகமாக இருக்கும்” என்றார்.  இதுவரை 34 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள பாட் கமின்ஸ், தனக்கு ஏ.பி.டிவில்லியர்ஸ், பாபர் ஆசம், ஜோ ரூட், வில்லியம்சன் ஆகியோருக்கு பந்து வீச உற்சாகமாக இருக்கும் என்றார்.

  “இவர்கள் சிறந்த வீரர்கள், இவர்களிடத்தில் பலவீனங்கள் இல்லை. ஒவ்வொரு அணியிலும் வீசுவதற்கு கடினமான 2 பேட்டர்களை வைத்துள்ளனர்” என்கிறார் பாட் கமின்ஸ்.

  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 14 ஆட்டங்களில் பாட் கமின்ஸ் 70 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ரவி அஸ்வின் 67 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
  Published by:Muthukumar
  First published: