முகப்பு /செய்தி /விளையாட்டு / துணைக் கேப்டனாக இருந்தவர் கேப்டன், கேப்டனாக இருந்தவர் துணை கேப்டன் - தலைகீழ் மாற்றம் கண்ட ஆஸ்திரேலிய அணி

துணைக் கேப்டனாக இருந்தவர் கேப்டன், கேப்டனாக இருந்தவர் துணை கேப்டன் - தலைகீழ் மாற்றம் கண்ட ஆஸ்திரேலிய அணி

ஸ்டீவ் ஸ்மித்

ஸ்டீவ் ஸ்மித்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

செக்ஸ் புகாரில் சிக்கி ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவியை டிம் பெய்ன் உதறியதையடுத்து ஆஷஸ் தொடரின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் கமின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். துணைக் கேப்டனாக ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பவுலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார், முன்பு வேகப்பந்து வீச்சாளர் லிண்ட்வால் ஒருமுறை ஒரே ஒரு டெஸ்ட்டுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு ஆஸ்திரேலியாவில் முதன் முறையாக ஒரு பவுலர் முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித் வெற்றிகரமான கேப்டனாக இருந்தவர், பாவம் பந்தை உப்புக் காகிதம் வைத்த் தேய்த்து தடை அனுபவித்து மீண்டும் துணைக் கேப்டனாகியுள்ளார். இது இவருக்கு டீபுரமோஷன். இதுதான் காலத்தின் கோலம் என்பது. ஆஸ்திரேலிய அணியின் 47வது கேப்டன் பாட் கமின்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

28 வயதாகும் கமின்ஸ் தனக்கு கிடைத்த இந்த புதிய கேப்டன் பதவி குறித்து உற்சாகமாகக் கூறுகையில், “மிகப்பெரிய ஆஷஸ் தொடரை முன்னிட்டு இந்த கேப்டன் பதவிக்கு என்னைத் தேர்வு செய்திருப்பதை மிகப்பெரிய கவுரவமாகக் கருதுகிறேன். டின் பெய்ன் எப்படி தலைமைப்பண்பை காததாரோ அதே போல் நானும் காப்பேன்” என்றார் பாட் கமின்ஸ்.

துணைக்கேப்டனாக இருந்த பாட் கமின்ஸ் கேப்டனாக பதவி உயர்வு பெற கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித் துணைக் கேப்டனாகியிருக்கிறார். ஆனால் பாட் கமின்ஸுக்கு ஸ்டீவ் ஸ்மித் தான் முழு ஐடியாவையும் பகிர்வார் என்று சொல்லலாம்.

ஸ்டீவ் ஸ்மித் இது பற்றி கூறுகையில், “மீண்டும் துணை கேப்டன்சி ரோலுக்கு திரும்பியதில் மகிழ்ச்சி. பாட் கமின்ஸுக்கு என்னவெல்லாம் உதவ முடியுமோ அத்தன உதவிகளையும் செய்வேன்” என்றார்.

மேலும் தானும் பாட் கமின்சும் நீண்ட கால நண்பர்கள் என்றும் ஒருவரையொருவர் நன்கு அறிந்திருப்பதால் உற்சாகமான காலம் கண்களுக்குத் தெரிகிறது என்கிறார் ஸ்டீவ் ஸ்மித்.

டிம் பெய்ன் கேப்டன்சியில் வரலாறு காணாத 2 சொந்த மண் தோல்விகளை இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 2017-ம் ஆண்டு பெண் ஊழியர் ஒருவருக்கு நிர்வாணப்படங்களை அனுப்பி செக்ஸ் டார்ச்சர் கொடுத்த புகாரில் சிக்கியுள்ளார் டிம் பெய்ன்.

First published:

Tags: Ashes, Pat Cummins, Steve Smith