அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்திய வீரர் பார்த்தீவ் படேல் ஓய்வு
Pathiv Patel Retirement | பார்த்தீவ் படேல் கடைசியாக தென்னாப்பிர்க்கா அணிக்கு எதிரான 2018-ம் ஜோகன்பார்க்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

பார்த்தீவ் படேல்
- News18 Tamil
- Last Updated: December 9, 2020, 3:11 PM IST
அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் படேல் அறிவித்துள்ளார்.
விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான பார்த்தீவ் படேல் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்ள்ளார். 2002-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானவர் பார்த்தீவ் படேல். 17 வயதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான பார்த்தீவ் படேல் இந்திய அணிக்காக 25 டெஸ்ட் போட்டிகளிலும், 38 ஒரு நாள் மற்றும் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். மேலும் பார்த்தீவ் படேல் 139 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி 2848 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் அவரது அதிகபட்ச ரன் 81.
பார்த்தீவ் படேல் கடைசியாக தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 2018-ல் ஜோகன்பார்க்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இடதுக்கை ஆட்டக்காரான பார்த்தீவ் படேல் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஓய்வை அறிவித்துள்ளார்.
அதில், இன்று நான் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன். மேலும் இந்த 18 ஆண்டுகள் கிரிக்கெட் பயணத்தில், பலரிடம் நன்றியுடன் இருந்ததாக உணர்கிறேன். இந்தியாவுக்காக விளையாடுவதற்கு 17 வயது சிறுவன் மீது பி.சி.சி.ஐ நம்பிக்கை வைத்தது. என்னுடைய இளம் வயதில், ஆரம்ப காலங்களில், ஒரு வழிகாட்டும் சக்தியாகவும், என்னை தக்கவைத்துக் கொண்டதற்காகவும் அவர்கள் மீது எனக்கு மிகுந்த நன்றியுணர்வு உள்ளது“ என்றுள்ளார்.

— parthiv patel (@parthiv9) December 9, 2020