2015-ல் சச்சினை தெரியாது என்ற மரியா ஷரபோவாவிடம் இன்று மன்னிப்பு கேட்கும் நெட்டிசன்கள்: விவசாயப் போராட்டம் பற்றிய சச்சினின் கருத்தினால் ஏற்பட்ட மாற்றம்

சச்சின் டெண்டுல்கர்.

இன்று விவசாயப் போராட்டம் எங்கள் உள்நாட்டுப் பிரச்சினை என்றும் இந்திய இறையாண்மை என்றும் சச்சின் டெண்டுல்கர் ட்வீட் செய்ததால் கொந்தளித்த சில கேரள நெட்டிசன்கள் அன்று ‘சச்சினைத் தெரியாது’ என்று கூறிய மரியா ஷரபோவாவிடம் மன்னிப்புக் கேட்டு ட்வீட் செய்து வருகின்றனர்

 • Share this:
  கடந்த 2015-ம் ஆண்டில் டென்னிஸ் வீராங்கனை மரிய ஷரபோவா, தனக்கு சச்சின் டெண்டுல்கர் யாரென்று தெரியாது எனத் தெரிவித்திருந்தார். அப்போது அவருக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். ஏதோ எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும் பளிங்குக்கல் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது போல் அன்று ஷரபோவாவை நெட்டிசன்கள் ஏசினர்.

  இன்று விவசாயப் போராட்டம் எங்கள் உள்நாட்டுப் பிரச்சினை என்றும் இந்திய இறையாண்மை என்றும் சச்சின் டெண்டுல்கர் ட்வீட் செய்ததால் கொந்தளித்த சில கேரள நெட்டிசன்கள் அன்று ‘சச்சினைத் தெரியாது’ என்று கூறிய மரியா ஷரபோவாவிடம் மன்னிப்புக் கேட்டு ட்வீட் செய்து வருகின்றனர்

  சச்சின் டெண்டுல்கர் மீது ஆத்திரமடைந்த கேரள நெட்டிசன்கள், ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து மன்னிப்பு கேட்டனர்.

  மேலும், கேரளத்தைச் சேர்ந்த பல நெட்டிசன்கள், மரியா ஷரபோவாவிடம் மன்னிப்பு கேட்டதோடு மட்டுமல்லாமல், கடவுளின் சொந்த நாடான கேரளாவுக்கு வர வேண்டும், கரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தபின் திருச்சூர் பூரம் பண்டிக்கைக்கு வாருங்கள் என அழைப்பு விடுத்தனர்.

  இதன் காரணமும் மரியா ஷரபோவாவுக்குப் புரியவில்லை, சச்சின் டெண்டுல்கரையே தெரியாதவர், சச்சின் விவசாயப் போராட்டம் பற்றிக் கூறிய கருத்தையுமா தெரிந்து வைத்திருக்கப் போகிறார், அவர் நெட்டிசன்களின் இந்த திடீர் மனமாற்றத்தை புரியாதவராய் “யாருக்கேனும் ஆண்டுகள் பற்றி ஏதேனும் குழப்பம் வந்துவிட்டதா” எனக் கேட்டுள்ளார்.

  மரியா ஷரபோவாவின் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட நெட்டிசன் ஒருவர் மன்னித்து விடுங்கள் மரியா, சச்சினை எங்களுக்கு ஒரு வீரராகத் தெரிந்த அளவுக்கு மனிதராகத் தெரியவில்லை, ஆனால், நீங்கள் சரியாகத்தான் கணித்தீர்கள். உங்களைத் தவறாகப் பேசியதற்கு மன்னிக்கவும்” எனத் தெரிவித்திருந்தார்.

  இன்னொரு நெட்டிசன் ’ஒரு லாரி நிறைய மன்னிப்பை ஏற்றி வருகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
  Published by:Muthukumar
  First published: