அஸ்வின், ரிஷப் பந்த், நடராஜன், சிராஜ் : ஐசிசியின் மாதத்தின் சிறந்த வீரர் விருதுக்கு பரிந்துரை
அஸ்வின், ரிஷப் பந்த், நடராஜன், சிராஜ் : ஐசிசியின் மாதத்தின் சிறந்த வீரர் விருதுக்கு பரிந்துரை
சிராஜ், பந்த்.
ஆஸ்திரேலியா சென்று அங்கு அவர்கள் கோட்டையைத் தகர்த்து வரலாற்று வெற்றி கண்ட இந்திய அணியிலிருந்து அஸ்வின், ரிஷப் பந்த் ஆகியோரது பெயர்கள் ஐசிசியின் மாதத்தில் சிறந்த வீரர்கள் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இவர்களுடன் நடராஜன், சிராஜ் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்ல இவர்கள் அனைவரும் பிரமாதமான பங்களிப்பு மேற்கொண்டனர்.
ஆண் மற்றும் மகளிர் கிரிக்கெட் பிரிவுகளில் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு இந்த விருது வழங்கப்படுகிறது, இது புதிதாக தொடங்கப்பட்டுள்ள விருதாகும்.
இந்நிலையில் ஜனவரி மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகளுக்கான விருதுகள் பட்டியலில் ரிஷப் பந்த், அஸ்வின், நடராஜன், சிராஜ், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், ஆஸ்திரேலியாவின் ஸ்டார் பேட்ஸ்மென் ஸ்டீவ் ஸ்மித், ஆப்கான் வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ், மரிசேன் காப், நாதின் டி கிளார்க் ஆகிய தென் ஆப்பிரிக்க வீராங்கனைகள். பாகிஸ்தானின் நிதா தார் ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்
ரசிகர்கள் ஒவ்வொரு மாதமும் ஆன்லைனில் தங்களுக்கு பிடித்த வீரர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
இது முன்னாள் வீரர்கள், ஒளிபரப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் கொண்ட தனித்த ஐசிசி ஓட்டிங் அகாடமியினரும் வாக்களிப்பதை உள்ளடக்கியதாகும். ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் ஐசிசியில் பதிவு செய்த ரசிகர்கள் ஐசிசி இணையதளம் வழியாக தங்கள் வாக்குகளை பதிவு செய்வார்கள். வெற்றி பெற்ற வீரர்கள் பெயர் ஒவ்வொரு மாதமும் 2வது திங்கட்கிழமை ஐசிசி டிஜிட்டல் சேனல்கள் மூலம் அறிவிக்கப்படும்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.