மான்செஸ்டர் மைதானத்தை தெறிக்கவிட்ட ஷிவா தோனி, ரிஷப் பண்ட்... வைரலாகும் வீடியோ!

ICC World Cup 2019 | India vs Pakistan | ஷிவா தோனி வெற்றியை கொண்டாடும் வகையில் ரிஷப் பண்டுடன் இணைந்து ஆரவார கூச்சலிட்டு மகிழந்தார்.

Web Desk | news18
Updated: June 17, 2019, 4:56 PM IST
மான்செஸ்டர் மைதானத்தை தெறிக்கவிட்ட ஷிவா தோனி, ரிஷப் பண்ட்... வைரலாகும் வீடியோ!
ஷிவா தோனி - ரிஷப் பண்ட்
Web Desk | news18
Updated: June 17, 2019, 4:56 PM IST
மான்செஸ்டர் மைதானத்தில் ரிஷப் பண்ட் உடன் தோனி மகள் ஷிவா இந்திய அணியின் வெற்றியை உற்சகமாக கொண்டாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

உலகக் கோப்பை தொடரின் 22வது லீக் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் அஹமது இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.

அபாரமாக ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியில் இந்தியா அணி டக்வத் லூயிஸ் முறைப்படி 89 ரன்கள் வித்தியாத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியை மான்செஸ்டர் மைதானத்தில் கண்டு ரசித்த ரிஷப் பண்ட் தோனி மகளுடன் வெற்றியை உற்சகமாக கொண்டாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 4 வயதான தேனானியின் மகள் ஷிவா இந்திய அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் ரிஷப் பண்டுடன் இணைந்து ஆரவார கூச்சலிட்டு மகிழந்தார். 
View this post on Instagram
 

Partners in crime 😈 @ziva_singh_dhoni


A post shared by Rishabh Pant (@rishabpant) on


ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் காயமடைந்த ஷிகார் தவான் போட்டியிலிருந்து விலகி உள்ளார். ஷிகார் தவான் சில போட்டிகளில் விளையாடமாட்டார் என்பதால் அவருக்கு மாற்று வீரராக டெல்லியை சார்ந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இங்கிலாந்து வரவழைக்கப்பட்டார். தவான் காயத்திலிருந்து திரும்பி வருவதால் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்தின் முடிவிற்காக ரிஷப் இங்கிலாந்தில் காத்திருக்கிறார்.
First published: June 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...