ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

T20 World Cup | பாபர், ரிஷ்வான் அபாரம்... நியூசிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறிய பாகிஸ்தான்

T20 World Cup | பாபர், ரிஷ்வான் அபாரம்... நியூசிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறிய பாகிஸ்தான்

பாகிஸ்தான் வெற்றி

பாகிஸ்தான் வெற்றி

டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிியல் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • intern, Indiasydneysydneysydneysydney

  டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் அணி முன்னேறியுள்ளது.

  ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி போட்டிகள் தொடங்கியுள்ளது. இதில் முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் -நியூசிலாந்து அணிகள் மோதின. சிட்னி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

  அதன்படி நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பின் அலன் முதல் ஓவரிலே ஷாகின் அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். கான்வே 21 ரன்கள் எடுத்திருந்தபோது 21 ரன்களில் ரன் ஆவுட் ஆகி வெளியேறினார். நியூசிலாந்து அணியில் இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வந்த பிலிப்ஸ் 6 ரன்களில் வெளியேற அந்த அணி 49 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து திணறியது.

  தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் வில்லியன்சன் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். கடைசி வரை சிறப்பாக விளையாடிய மிட்செல் அரைசதம் அடித்து அணியின் சரிவை சரிகட்டினார். 35 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

  இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 152 ரன்களை எடுத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஷாகித் அப்ரிடி 2 விக்கெட்டையும் முகமது நவாஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

  153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்க வீரர்கள் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 100 ரன்களை சேர்த்தது. இந்த டி20 உலககோப்பையில் பேட்டிங்கில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் அரைசதம் அடித்தார். 42 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து பொறுப்புடன் ஆடிய ரிஸ்வான் 43 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

  இறுதியில் பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 153 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. இதனால் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று  மூன்றாவது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. நாளை நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் 13ஆம் தேதி மெல்போர்னில் நடைபெறும் இறுதி போட்டியில் பாகிஸ்தானை  எதிர்கொள்ளும்.

  Published by:Arunkumar A
  First published: