பாகிஸ்தானுக்கு தொடரும் ரன் அவுட் பரிதாபங்கள்.. யாசிர் ஷாவின் ஷூ கழன்றதால் ரன் அவுட்டான சோகம்!

Pakistan's #YasirShah run out after his shoe comes off | கேப்டன் சர்ப்ராஸ் அகமது இரண்டு ரன்கள் ஆசைப்பட்டு ஓட மறுமுனையில் இருந்த யாசிர் ஷா ரன் அவுட்டானார். #PAKvNZ

news18
Updated: December 6, 2018, 5:59 PM IST
பாகிஸ்தானுக்கு தொடரும் ரன் அவுட் பரிதாபங்கள்.. யாசிர் ஷாவின் ஷூ கழன்றதால் ரன் அவுட்டான சோகம்!
ரன் அவுட்டான யாசிர் ஷா (AFP)
news18
Updated: December 6, 2018, 5:59 PM IST
நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் யாசிர் ஷாவின் ஷூ கழன்றதால் ரன் அவுட்டாகிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த நியூசிலாந்து அணி, பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. இறுதியில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 348 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக, நியூசிலாந்து அணியின் அறிமுக வீரர் வில்லியம் சாமெர்வில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கின்போது, கேப்டன் சர்ப்ராஸ் அகமது இரண்டு ரன்கள் ஆசைப்பட்டு ஓட மறுமுனையில் இருந்த யாசிர் ஷா ரன் அவுட்டானார்.

கிரிக்கெட் விளையாட்டில் ரன் அவுட்டாவது சாதரணம்தான். ஆனால், யாசிர் ஷாவுக்கு கண்டம் காலில் இருந்துள்ளது. ஆட்டத்தின் 133-வது ஓவரின் முதல் பந்தை அடித்த சர்ப்ராஸ், இரண்டு ரன்கள் ஓடலாம் என யாசிருக்கு கூறினார். இரண்டாவது ரன் எடுக்கும்போது யாசிர் ஷா, டைவ் அடித்து கோட்டைத் தொட்டார். இருப்பினும், ரன் அவுட்டானார்.பின்னர்தான் தெரிந்தது ரன் அவுட்டிற்கான காரணம். 2-வது ரன்னுக்கு ஓடியபோது யாசிர் ஷாவின் ஷூ கழன்று விழுந்ததால் ரன் அவுட்டாகியுள்ளார். ஷூ கழன்றால் சொல்ல வேண்டியதானே என சர்ப்ராஸ் புலம்பிக் கொண்டு இருக்க, யாசிர் ஷா பரிதாபமாக வெளியேறினார்.

அண்மையில், பாகிஸ்தான் அணியின் அசார் அலி, கவனக்குறைவாக நடந்துகொண்டதால் 2 முறை ரன் அவுட்டாகி ஆச்சர்யம் அளித்தார். தற்போது, அந்த வரிசையில் யாசிர் ஷாவும் சேர்ந்துள்ளார்.

Also Watch...

First published: December 6, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்