இந்தியாவைப் பார்த்து காப்பி அடிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

Pakistan's #RahulDravid inspiration | 2018-ல் ராவிட் பயிற்சியின்கீழ் பிரித்வி ஷா தலைமையிலான இந்திய அணி, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்றது. #PCB

news18
Updated: February 13, 2019, 4:54 PM IST
இந்தியாவைப் பார்த்து காப்பி அடிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள். (Image: Getty)
news18
Updated: February 13, 2019, 4:54 PM IST
இந்திய இளையோர் கிரிக்கெட் அணிக்கு முன்னாள் வீரர் டிராவிட்டை பயிற்சியாளராக நியமித்தது போல், பாகிஸ்தான் அணிக்கும் முன்னாள் வீரர்களை பயிற்சியாளராக நியமிக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணிக்கு முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமித்தது. ராகுல் டிராவிட் தலைமையில் இளம் வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கடந்த 2018-ம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற பிரித்வி ஷா தலைமையிலான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையை இந்தியா வென்றது. டிராவிட்டின் சிறந்த பயிற்சியால் பிரித்வி ஷா, ஹர்திக் பாண்டியா, மயங்க் அகர்வால், குல்தீப் யாதவ் உள்ளிட்ட ஏராளமான வீரர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

India U19 Team, இந்திய அணி
2018 ஐசிசி ஜூனியர் உலகக்கோப்பையை வென்ற கொண்டாட்டத்தில்  இந்திய அணி. (Twitter)


அண்மையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் துணைப்பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் அணிக்கும் முன்னாள் வீரர்களை பயிற்சியாளராக நியமிக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

Ehsan Mani, Sarfraz Ahmed, சர்ஃபராஸ் அஹமது, இசான் மனி
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் இசான் மனி உடன் கேப்டன் சர்பராஸ் அகமது. (AP)
Loading...
இதுகுறித்து கிரிக்கெட் வாரியத் தலைவர் இசான் மனி கூறுகையில், “ஆஸ்திரேலியாவில் முன்னாள் வீரர்கள் ரோட்னி மார்ஷ், ஆலன் பார்டர் மற்றும் ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டனர்.

இந்தியாவும் இளையோர் அணிக்கு ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமித்த பிறகு, நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், இங்கும் முன்னாள் வீரர்களை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

தோனி செய்த ஸ்டம்பிங் அவுட் இல்லை? நடுவர் தீர்ப்பு குறித்து ஐசிசி ஆய்வு

Also Watch...

First published: February 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...