ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஆசை காட்டி மோசம் செய்த தேர்வு வாரியம் - வித்தியாசமாக எதிர்ப்பு தெரிவித்த பந்துவீச்சாளர்

ஆசை காட்டி மோசம் செய்த தேர்வு வாரியம் - வித்தியாசமாக எதிர்ப்பு தெரிவித்த பந்துவீச்சாளர்

ஜூனைத் கான்

ஜூனைத் கான்

ஜுனைத் கானுக்கு பதிலாக சேர்க்கப்பட்ட வஹாப் ரியாஸ் கடந்த 2 ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஜுனைத்கான் சேர்க்கப்பட்டு, திடீரென நீக்கப்பட்டுள்ளதால் அதிருப்தி அடைந்துள்ளார். 

  ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் லீக் போட்டி உட்பட மொத்தம் 46 ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

  இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. முதலில் அறிவிக்கப்பட்ட அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் இடம் பிடித்திருந்தார்.

  Also Read... உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு 'ஜாக்பாட்'... இதுவரை இல்லாத அளவிற்கு பரிசுத்தொகை அறிவிப்பு

  இதனை அடுத்து நேற்று, பாகிஸ்தான் அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அபிட் அலி, ஜுனைத் கான், பஹீம் அஷ்ரப் ஆகியோர் நீக்கப்பட்டு முகமது அமிர், வஹாப் ரியாஸ், ஆசிப் அலி ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

  அணியில் இருந்து திடீரென நீக்கப்பட்டதற்கு வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் நூதனமான முறையில் வாயில் கருப்பு துணி கட்டி தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

  பின்னர், சிறிது நேரத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த படத்தை நீக்கினார்.

  ஜுனைத் கானுக்கு பதிலாக சேர்க்கப்பட்ட வஹாப் ரியாஸ் கடந்த 2 ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  Also See...

  Published by:Sankar
  First published:

  Tags: ICC Cricket World Cup 2019, Pakistan cricket