• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ‘கோயிங் ஹோம்’ ட்வீட்: விராட் கோலியை கலாய்த்த பாகிஸ்தான் ரசிகர்கள்

‘கோயிங் ஹோம்’ ட்வீட்: விராட் கோலியை கலாய்த்த பாகிஸ்தான் ரசிகர்கள்

ஜடேஜா, கோலி

ஜடேஜா, கோலி

2012-ம் ஆண்டு விராட் கோலி தன் ட்விட்டர் பக்கத்தில், “கோயிங் ஹோம் டுமாரோ நாட் ஏ கிரேட் ஃபீலிங்” என்று கூறியதை வைத்து பாகிஸ்தான் ரசிகர்கள் டி20 உலகக்கோப்பையிலிருந்து இந்தியா வெளியேறியதை கிண்டலில் இறங்கினர்.

  • Share this:
    2012-ம் ஆண்டு விராட் கோலி தன் ட்விட்டர் பக்கத்தில், “கோயிங் ஹோம் டுமாரோ நாட் ஏ கிரேட் ஃபீலிங்” என்று கூறியதை வைத்து பாகிஸ்தான் ரசிகர்கள் டி20 உலகக்கோப்பையிலிருந்து இந்தியா வெளியேறியதை கிண்டலில் இறங்கினர்.

    2012-ல் அவரது ட்வீட்டை தேடிப்பிடித்து இப்போது கிண்டலில் இறங்கியுள்ளனர் பாகிஸ்தான் ரசிகர்கள் ஆனால் ஒரு சில நெட்டிசன்கள் அங்கிருந்தே கூட ‘பாதுகாப்பான பயணம்’, சேஃப் ஜர்னி என்று அக்கறையுடன் பதிவிட்டிருப்பது போல்தான் தெரிகிறது.

    இந்திய அணியின் வாய்ப்பு ஆப்கானிஸ்தானை நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதில் முடிந்து போனது. ஆப்கானிஸ்தானுக்கு அன்று இந்திய ரசிகர்களின் ஆதரவு அதிகமிருந்தது. ஏதாவது மிராக்கிள் நடந்து இந்திய அணி அரையிறுதியில் நுழைந்து வென்று, பிறகு இறுதியில் பாகிஸ்தானை தோற்கடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆவலாக இருந்தது.

    ஆனாலும் இந்திய அணியின் வெளியேற்றத்தை ‘இன்னும் கூட இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற முடியும்’ என்ற ரேஞ்சில் மீம் மழை பொழிந்தனர். இந்திய ரசிகர்களும் கிண்டலில் இறங்கினர், ஆனால் பாகிஸ்தான் ரசிகர்கள் கிண்டலில் இறங்கியதை இந்திய ரசிகர்கள் ஒருக்காலும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.











    ஏன் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு இந்த குஷி என்று கேட்கலாம். பாகிஸ்தான் அணி 5க்கு 5 வெற்றியுடன் தோல்வியே இல்லாமல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா எனும் பெரிய சோதனையை சந்திக்கிறது. பெரிய யூனிட்டாகச் செயல்பட்டு, ஒரு அணியாகத் திரண்டெழுந்து மொத்தமாக வென்றுள்ளது. கோப்பையை வெல்லப்போகும் அணி பாகிஸ்தான் தான் என்று அந்த ரசிகர்கள் மிதப்பில் குஷியாக உள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: