PAKvAFG | கடைசி ஓவரில் த்ரில் வெற்றி: இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளியது பாகிஸ்தான்!

பாகிஸ்தான் அணி இறுதிக் கட்டத்தில் கேப்டன் சர்பராஸ் அஹமது, சதாப் கான் ரன் அவுட்டாகி வெளியேறியதால் யார் வெற்றி பெறுவர்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமானது.

Web Desk | news18
Updated: June 29, 2019, 10:52 PM IST
PAKvAFG | கடைசி ஓவரில் த்ரில் வெற்றி: இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளியது பாகிஸ்தான்!
PAKvAFG
Web Desk | news18
Updated: June 29, 2019, 10:52 PM IST
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் பாகிஸ்தான் த்ரில் வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீச் 36-வது லீக் ஆட்டம் லீட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.  இந்தப் போட்டியில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ரஹமத் ஷா, கேப்டன் நைப் களமிறங்கினர். கேப்டன் நைப் 15 ரன்களிலும் அடுத்த வந்த ஹஷ்மதுல்லா ஷாஹிடி டக் அவுட்டாகி வெளியேறினர்.


ஆப்கான் அணியின் பின்வரிசை வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகியதால் அந்த அணி ரன்குவிக்க முடியாமல் திணறியது.



பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் அஃப்ரிடி ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார்.

ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 227  ரன்களை மட்டுமே எடுத்தது.  இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஜமான் டக்அவுட்டாகி ஆரம்பமே அதிர்ச்சியளித்தார். அவரை அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர்.

பாகிஸ்தான் அணி இறுதிக் கட்டத்தில் கேப்டன் சர்பராஸ் அஹமது, சதாப் கான் ரன் அவுட்டாகி வெளியேறியதால் யார் வெற்றி பெறுவர்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமானது. பாகிஸ்தான் அணி 7 விக்கெட்களை இழந்து தடுமாறிய போது இமாத் வாசிம் கடைசி சில ஓவர்களில் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் இலக்கை எட்டி த்ரில் வெற்றி பெற்றது. இமாத் வாசிம் 49 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பை அரையிறுதி வாய்ப்பை பாகிஸ்தான் தக்கவைத்துக் கொண்டது. புள்ளிப்பட்டியிலில் இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி 4-வது இடத்திற்கு பாகிஸ்தான் அணி முன்னேறியது.
First published: June 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...