Home /News /sports /

இங்கிலாந்து அணியை துவம்சம் செய்த பாகிஸ்தான் ஓப்பனிங் பேட்ஸ்மென்கள்; 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

இங்கிலாந்து அணியை துவம்சம் செய்த பாகிஸ்தான் ஓப்பனிங் பேட்ஸ்மென்கள்; 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம்

முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம்

கராச்சியில் நேற்று நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் இங்கிலாந்து 199/5 என்று ரன் குவிக்க, தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம் 110 நாட் அவுட், முகமது ரிஸ்வான் 88 நாட் அவுட் என்று 203 ரன்களுக்கு நோ-லாஸ் என்று 10 விக்கெட்டுகளில் வெற்றி பெற்று உலக சாதனை

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
கராச்சியில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான  2-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியின் ஒப்பனிங் பார்ட்னர்ஷிப்பின் அதிரடியால் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது.  இதைதொடர்ந்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது . பாபர் அசாம், ரிஸ்வான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். அப்போது பாபர் அசாம் ஃபார்ம் அவுட் என்றெல்லாம் பிரஷர் போடப்பட்டது, ஆனால் அதையெல்லாம் இடது கையால் ஊதிவிட்டார் பாபர் அசாம் 39 பந்துகளில் அரைசதம் கண்ட பாபர் அடுத்த 23 பந்துகளில் இன்னொரு 50ஐ எடுத்து 62 பந்துகளில் டி20 சதம் கண்டு 66 பந்துகளில் 11 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 110 ரன்களை விளாசினார்.

அவருடன் களமிறங்கிய தொடக்க வீரர்  உலகின் நம்பர் 1 டி20 பிளெயர் முகமது ரிஸ்வான் 51 பந்துகளில் 5 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 88 நாட் அவுட் என்று முடிக்க, 3 பந்துகள் மீதமிருக்க பாகிஸ்தான் அபார வெற்றி பெற்று 7 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்று சமன் செய்தது.

கடந்த போட்டியில் இலக்கை விரட்டிய இங்கிலாந்து, இந்த முறை கேப்டன் மொயீன் அலியின் முதலில் பேட் செய்யும் முடிவினால் மந்தமான பிட்சை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. முதல் பாதியில் பிட்ச் கொஞ்சம் ஸ்லோ. இங்கிலாந்து அணியில் பென் டக்கெட் தனது அல்ட்ரா மாடர்ன் ஸ்ட்ரோக் பிளேயினால்  22 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுக்க ஹாரி புரூக் 19 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 31 ரன்கள் எடுத்தார், கேப்டன் மொயின் அலி 23 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 55 ரன்கள் விளாசினார்.

இதையும் படிங்க: தினேஷ் கார்த்திக்கை 12-13வது ஓவரில் இறக்கினால் என்ன கெட்டுவிடும் - கவாஸ்கர் காட்டமான கேள்வி

தொடக்கத்தில் பில் சால்ட் 27 பந்தில் 30 ரன் என்றும் ஹேல்ஸ் 21 பந்தில் 26 என்றும் கொஞ்சம் மந்தம் காட்டினர், இதனையடுத்து 11.3 ஓவர்களில் இங்கிலாந்து 95/3 என்று இருந்தது, ஒருவேளை இது 110 ஆக இருந்திருந்தால் பாகிஸ்தான் கொஞ்சம் தடுமாறியிருக்கும். ஒருவழியாக 199/5 என்று கேப்டன் மொயின் அலி, பென் டங்கெட்டினால் இங்கிலாந்து எட்டியது. பாகிஸ்தான் தரப்பில் ஹஸ்னைன் 4 ஓவர் 51 என்று புவனேஷ்வர் குமார் ஆனார். ஹாரிஸ் ராவுஃப் 30 ரன்களுக்கு 2 விக்கெட். தஹானி 2 விக்கெட். நவாஸ் 40 ரன்களுக்கு 1 விக்கெட்.

உலக சாதனை ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்: 

200 ரன்கள் இலக்கை எட்ட பாகிஸ்தானுக்கு நல்ல தொடக்கம் தேவைப்பட்டது. முதல் போட்டியில் நல்ல தொடக்கம் கண்டாலும் பின்னால் வந்தார்கள் சொதப்ப பாகிஸ்தான் தோற்றது, ஆனால் இந்த முறை அசாமும் ரிஸ்வானும் விடுவதாக இல்லை. முதல் ஓவரிலேயே ஆஃப் சைடு, லெக் சைடில் 2 பவுண்டரிகள் விளாசி விரட்டலைத் தொடங்கினார் ரிஸ்வான். பாபர் அசாம் முதலில் சாம் கரனை 2 பவுண்டரிகள் விளாசினார்.

ஸ்பின் வந்தது. குறிப்பாக மொயின் அலி 13வது ஓவரை வீச 21 ரன்களை விளாசினர் இருவரும், ஆட்டம் மாறிவிட்டது. இதில் 3 சிக்சர்கள் அடங்கும். இங்கிருந்து ஒன்றும் செய்ய முடியவில்லை, சாத்து சாத்தென்று சாத்தினர்.  லூக் உட் 4 ஒவர் 49 ரன்.ஆதில் ரஷீத் 3 ஓவர் 34 ரன். டேவிட் வில்லே 3.3 ஓவர் 44 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

19.3 ஓவர்களில் உலக சாதனை ஒப்பனிங்கில் பாபர், ரிஸ்வான் வென்று கொடுத்தனர். இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவெனில்  டி20களில் உலக சாதனை ஓப்பனிங்கில் இதுவரை 4 முறை ரிஸ்வான், பாபர் அசாம் ஜோடியே சாதனை நிகழ்த்தியிருந்தது. 152நோ லாஸ், 158 நோலாஸ், 197 நோலாஸ் இப்போது 203 நோலாஸ். இவர்கள் அல்லாது கேன் வில்லியம்சன் மார்டின் கப்தில் 171 நோ-லாஸ் சாதனை உள்ளது. ஆகவே ஓப்பனிங்கில் உலக சாதனை நிகழ்த்துவது பாபர் அசாம், ரிஸ்வான் ஜோடிக்குப் புதிதல்ல.

 
Published by:Arunkumar A
First published:

Tags: Cricket, England, Pakistan cricket

அடுத்த செய்தி