ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஹாரிஸ் ராவுஃபின் அட்டகாசமான 19வது ஓவர்: நம்ப முடியாத பாகிஸ்தானின் ‘த்ரில்’ வெற்றி!

ஹாரிஸ் ராவுஃபின் அட்டகாசமான 19வது ஓவர்: நம்ப முடியாத பாகிஸ்தானின் ‘த்ரில்’ வெற்றி!

மாதிரி படம்

மாதிரி படம்

கராச்சியில் நேற்று நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் த்ரில் வெற்றியில் ஹாரிஸ் ராவுஃபின் அட்டகாசமான 19வது ஓவர் மற்றும் வாசிமின் 20வது ஓவரும் பங்களிப்பு செய்தன. தொடரை 2-2 என்று சமனிலை ஆகியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • intern, Indiapakistanpakistanpakistan

கராச்சியில் நேற்று நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 4 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வென்று சமநிலை எய்தியுள்ளன.

ஹாரிஸ் ராவுஃபின் அட்டகாச பவுலிங்:

இங்கிலாந்து அணி 17வது ஓவர் முடிவில் 134/7 என்று கடைசி 3 ஓவர்களில் 33 ரன்கள் அடிக்கும் கடினப்பாட்டில் இருந்தது. ஆதில் ரஷீத் 3, லியாம் டாசன்-7 களத்தில் இருந்தனர்.

18வது ஓவரை முகமது ஹஸ்னைன் வீச, லியாம் டாசன் லாங் ஆஃப் மேல் சிக்சர் விளாசினார், அடுத்த பந்து நோ-பாலாக அமைய ஸ்லோ பந்தை டாசன் தேர்ட்மேன் திசையில் பவுண்டரிக்கு விரட்டினார். அடுத்த பந்து ஃப்ரீ ஹிட் லாங் ஆனில் பவுண்டரிக்குப் பறந்தது. அடுத்த பந்தும் தேர்ட்மேனில் பவுண்டரி ஆக அந்த ஓவரில் 4 பவுண்டரி ஒரு சிக்ஸ் என்று 24 ரன்கள் வந்தது.

19, 20வது ஓவரில் இங்கிலாந்துக்குத் தேவை 9 ரன்களே. அப்போதுதான் ஹாரிஸ் ராவுஃப் பந்து வீச வந்தார். டாஸன் உடனேயே 2வது பந்தை லெக் திசையில் பவுண்டரி விளாசினார். அப்போதுதான் ராவுஃபுக்கு பவுன்சர் கைக்கொடுத்தது லியாம் டாசன் புல் ஷாட்டில் மிட்விக்கெட்டில் கேட்சில் சிக்கி வெளியேறினார். அடுத்த பந்தே அறிமுக வீரர் ஸ்டோன் ஆஃப் ஸ்டம்பை இழந்தார். இங்கிலாந்து வெற்றி பெற 5 ரன்கள் தேவை என்ற நிலையில் 162/9 என்று ஆனது. ராவுஃப் 4 ஓவர் 32 ரன் 3 விக்கெட். இந்த ஓவரை அட்டகாசமாக வீசி 2 விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்தது பாகிஸ்தானுக்கு வெற்றி வாய்ப்பை உருவாக்கியது.

ஆனாலும் அடில் ரஷீத் இருக்கிறார்.  20வது ஓவரை முகமது வாசிம் வீசினார். 2வது பந்தில் டாப்லி ரன் அவுட் ஆக இங்கிலாந்து 163/9 என்று தோற்றது. முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சைத்தேர்வு செய்தது.

இதன்படி பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் சார்பில் முதலாவதாக களமிறங்கிய முகமது ரிஸ்வான் மற்றும் கேப்டன் பாபர் அசாம் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ரன்ரேட்டை உயர்த்தினர்.இருவரும் ஸ்கோரை 97 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். பாபர் அசாம் 36 ரன்களில் ஆட்டமிழந்த பிறகு ஷான் மசூத் (21), குர்தில் ஷா (2) வெளியேற ரிஸ்வான் மட்டும் தன் அபாரமான தொடர் பார்மில் 67 பந்துகளில் 9 பவுண்டரி 1 சிக்சருடன் 88 ரன்கள் எடுத்து 20வது ஓவரில் அவுட் ஆனார். இவரது ஆரம்ப ஸ்ட்ரைக் ரேட்டுக்கும் பின்னர் ஆடிய ஸ்ட்ரைக் ரேட்டுக்கும் பெரிய வித்தியாசம் இருந்தது. 38 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த ரிஸ்வான் அடுத்த 29 பந்துகளில் 21 ரன்களையே எடுக்க முடிந்தது என்றால் இங்கிலாந்து இவரைக் கட்டிப்போட்டு விட்டது.

இறுதியில் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது.167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் சார்பில் பிலிப் சால்ட் மற்றும் ஹேல்ஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. இருந்தபோதும் இங்கிலாந்து அணியின் டுக்கெட் 33 ரன்களும், பூருக் 34 ரன்களும் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

அடுத்து களமிறங்கிய கேப்டன் மொயின் அலி 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கி அதிரடி காட்டிய டாசன் 34 (17) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அடில் ரஷித் 3 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் இங்கிலாந்து அணி 19.2 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக முகமது நவாஸ் மற்றும் ஹரிஸ் ரூப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஹஸ்நைன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

Published by:Anupriyam K
First published:

Tags: Cricket, England, Karachi, Pakistan cricket