முகப்பு /செய்தி /விளையாட்டு / ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மல்.. வந்தது புதிய பொறுப்பு..!

ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மல்.. வந்தது புதிய பொறுப்பு..!

கம்ரான் அக்மல்

கம்ரான் அக்மல்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மல் அனைத்து போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • interna, IndiaIslamabadIslamabadIslamabad

பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பராக இருந்த 41 வயதான கம்ரான் அக்மல் அந்த அணியின் முன்னணி முகங்களில் ஒருவராக திகழ்ந்தவர். 2002ஆம் ஆண்டில் முதல் சர்வதேச போட்டியில் களமிறங்கிய கம்ரான் அக்மல் இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 157 ஒருநாள் போட்டிகள், 53 டெஸ்ட் போட்டிகள், 58  டி20 போட்டிகளில்  விளையாடியுள்ளார்.

2017ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக தனது கடைசி சர்வதேச போட்டியை கம்ரான் விளையாடினார். அதன் பின்னர், பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் விளையாடி வந்த இவர், தற்போது வீரர்களை வழிநடத்தும் பயிற்சியாளர், மேலாளர் போன்ற பணிகளை மேற்கொள்ள விரும்புவதாக தெரிவித்து,  அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக  அறிவித்துள்ளார்.

மொத்தம் பாகிஸ்தான் அணிக்காக 11 சதங்கள், 27 அரை சதங்களை அடித்துள்ளார் கம்ரான். 2009ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை வென்ற பாகிஸ்தான் அணியில் விளையாடிய வீரர்களில் கம்ரான் அக்மலும் ஒருவர். இவருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அணியின் தேர்வுக் குழுவில் பொறுப்பு வழங்கியுள்ளது. ஜூனியர் வீரர்களை தேர்வு செய்து அவர்களை வழிநடத்தும் பொறுப்பில் கம்ரான் உள்ளார்.

இதையும் படிங்க: 'வழிவிடுகிறேன்'.. சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் ஆரோன் பின்ச்!

இவரது சகோதரர் உம்ரான் அக்மலும் பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரர். பாகிஸ்தான் அணியின் தற்போதைய கேப்டன் பாபர் அசாம் இவரது உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர் ஆரோன் பின்ச் நேற்று சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து சில மணி நேரங்களிலேயே கம்ரான் அக்மலின் ஓய்வு அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

First published:

Tags: Cricket, Pakistan cricket, Pakistan Cricketer, Retirement