முகப்பு /செய்தி /விளையாட்டு / Pak vs WI: ஷாஹின் அஃப்ரீடி ஒரே ஓவரில் 3 விக்கெட்: மே.இ.தீவுகளை வீழ்த்தி டி20 தொடரை வென்றது பாகிஸ்தான்

Pak vs WI: ஷாஹின் அஃப்ரீடி ஒரே ஓவரில் 3 விக்கெட்: மே.இ.தீவுகளை வீழ்த்தி டி20 தொடரை வென்றது பாகிஸ்தான்

டி20 தொடரை வென்றது பாகிஸ்தான்.

டி20 தொடரை வென்றது பாகிஸ்தான்.

கராச்சியில் நடைபெற்ற பாகிஸ்தான் - மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கராச்சியில் நடைபெற்ற பாகிஸ்தான் - மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இன்னும் ஒரு போட்டி மீதமுள்ளது இதில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றால் அது ஆறுதல் வெற்றியாகவே இருக்கும்.

டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்கு 172 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 38 ரன்கள் எடுத்தார். கேப்டன் பாபர் அசாம் 7 ரன்னில் ரன்-அவுட் ஆனார். இஃப்திகார் 19 பந்தில் 32 ரன்களையும் ஹைதர் அலி 34 பந்துகளில் 31 ரன்களையும் எடுக்க, கடைசி கட்டத்தில் ஷதாப் கான் 12 பந்துகளில் ஒரு பவுண்டரி, 3 சிக்சருடன் 28 ரன்கள் விளாசி ஆல்ரவுண்ட் அதகளம் புரிந்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அகீல் ஹுசைன் 4 ஓவர் 16 ரன் ஒரு விக்கெட் என்று பாகிஸ்தானை கட்டிப்போடார். ஓடியன் ஸ்மித் 34 ரன்களுக்கு 2 விக்கெட் எடுத்தார்.

அடுத்து களம் புகுந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 163 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் 9 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிரான்டன் கிங் 43 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 67 ரன்கள் விளாசியும் பயனில்லை, கடைசியில் ரொமாரியோ ஷெப்பர்ட் 19 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 35 ரன்கள் எடுத்து வெற்றிக்காக கடுமையாக முயன்றார் ஆனால் பயனளிக்கவில்லை.

10 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பாதையில் சென்று கொண்டிருந்தது. பிராண்டன் கிங் அப்போதுதான் பிரமாதமான ஸ்ட்ரோக் ப்ளேயை ஆடிக்கொண்டிருந்தார். ஆனால் ஷதாப் கான் வந்தார் 4 ஓவர் 22 ரன் என்று கிடுக்கிப் பிடிப் போட்டார். பிராண்டன் கிங் 67 ரன்களில் ஹாரிஸ் ராவுஃப் பந்தில் ஆட்டமிழந்த போது வெஸ்ட் இண்டீஸ் அணி 15.2 ஓவர்களில் 118/5 என்று இருந்தது.

அப்போது ஓடியன் ஸ்மித் இறங்கி அபாரமாக ஒரு சிக்ஸ் ஒரு பவுண்டரி அடிக்க ஸ்கோர் 127 ஆக உயர்ந்தது. ஆனால் அப்போதுதான் 17வது ஓவரை வீச வந்த ஷாஹின் அஃப்ரீடி ஓடியன் ஸ்மித் (12), டோமினிக் டிரேக்ஸ்-0, ஹெய்டன் வால்ஷ்-0 ஆகியோரை வீழ்த்தி வெளியேற்றினார். இது ஆட்டத்தின் போக்கை மாற்றியது. 127/5 என்பது 131/8 ஆனது. ஆனால் ரொமாரியோ ஷெப்பர்ட் இலக்கை நோக்கி கடைசியாக ஒருமுறை மட்டையச் சுழற்றினார். 18வது ஓவரில் ஒரு சிக்சரும் 19வது ஓவரில் ஒரு பவுண்டரியும் அடிக்க, கடைசி ஓவரில் 23 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.

ரவுஃப் வீசிய கடைசி ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட 11 ரன்களை அடித்தார் ரொமாரியோ ஷெப்பர்ட், கடைசி 2 பந்துகளில் 11 ரன்கள் தேவை எனும்போது அப்போது ஒரு அதிரடி ஷாட்டை கவர் திசையில் அடித்தார் அது ட்ரேசர் புல்லட் போல் பவுண்டரிக்குப் பறந்தது, அங்கு ஆசிப் ஓடி தொடையினால் தடுத்தார். ஒரு ரன் தான். ஒஷேன் தாமஸை கடைசி பந்தில் யார்க்கரில் காலி செய்தார் ராவுஃப், பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஷதாப் கான் தேர்வு செய்யப்பட்டார்.

Also Read: டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ரவீந்திர ஜடேஜா ஓய்வு?- ரசிகர்கள் அதிர்ச்சி

இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி வியாழக்கிழமை நடைபெறுகிறது.

First published:

Tags: Babar Azam, Pakistan cricket, West indies