முல்டானில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற பாகிஸ்தான் - மே.இ.தீவுகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஒயிட் வாஷ் 3-0 உதை கொடுத்தது. ஆல்ரவுண்டர் ஷதாப் கான் பேட்டிங்கில் 86 ரன்கள் பிறகு பவுலிங்கில் 4 விக்கெட்டுகள் என்று அசத்தி ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் செல்ல தொடர் நாயகனாக இமாம் உல் ஹக் தேர்வு செய்யப்பட்டார்.
இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது,தொடர்நது நடைபெற்ற 2வது போட்டியில் பாகிஸ்தான் அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது . மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களமிறங்கிய இமாம் உல் ஹக் - ஜமான் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜமான் ஆட்டமிழந்தார். பின்னர் ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய இமாம் உல் ஹக் அரைசதம் கடந்து 62 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பாகிஸ்தான் அணியில் சதாப் கான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 86 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 48 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் குவித்தது.
பாகிஸ்தான் 117/5 என்று பாபர் அசாமும் 1 ரன்னில், ரிஸ்வானும் 11 ரன்னில் ஆட்டமிழக்க ஷதாப் உள் நுழைந்தார். தான் நங்கூரமும் பாய்ச்சுவேன் நிற்க விட்டால் பிறகு சாத்தவும் சாத்துவேன் என்ற ரீதியில் ஒரு டிபிகல் பாகிஸ்தான் ஆல்ரவுண்டராக ஆடினார் ஷதாப் அவர் 78 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 86 ரன்கள் எடுத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் விரட்டலின் போது ஷேய் ஹோப் 4 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் விளாச 3 ஓவர்களில் 25 என்ற தொடக்கத்தைப் பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியை பாகிஸ்தானின் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஷநவாஸ் தஹானி (1/36) தன் கைல் மேயர்ஸ் (5) விக்கெட் மூலம் தடை போட்டார். ஹசன் அலி, ஷேய் ஹோப்பை ஹூக் ஷாட்டில் கேட்ச் ஆகச் செய்தார்.
ஷம்ரா புரூக்ஸ் 18 ரன்களில் முகமது வாசீமிடம் விழ, நிகோலஸ் பூரன் 11 ரன்களில் விழ 15.1 ஒவரில் வெஸ்ட் இண்டீஸ் 69/4 என்று சரிவு கண்டது. ஷதாப் பந்து வீச வந்தார் ரோவ்மென் போவெல் விக்கெட்டை வீழ்த்தினார். கீசி கார்ட்டி என்ற வீரரை அற்புதமான லெக்ஸ்பின்னுக்கு விக்கெட் கீப்பர் ஸ்டம்பிங்கில் வெளியேற்றினார்.
ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியில் அகீல் ஹுசைன் வெளுத்து கட்டி விட்டார். அவர் 37 பந்துகளில் 2 பவுண்டரி 6 சிக்சர்களுடன் ஷதாப் கானை கொஞ்சம் மிரட்டியதோடு பாகிஸ்தானையும் கதிகலங்கச் செய்தார். இவருடன் கீமோ பால் 21 ரன்களியும் ரொமாரியோ ஷெப்பர்ட் 16 ரன்களையும் எடுக்க 216 ரன்களை 38 ஓவர்களிலேயே எட்டினர், ஆனால் அகீல் ஹுசைனை ஷதாப் கான் வீழ்த்த மே.இ.தீவுகளின் ஆட்டம் முடிந்தது.
ஷதாப் கான் 3 பவுண்டரிக்ள் 4 சிக்சர்களுடன் 9 ஒவர்களில் 62 ரன்கள் விளாசப்பட்டார், ஆனால் இவரது 4 விக்கெட்டுகளால் வெஸ்ட் இண்டீஸ் தோல்வி கண்டு தொடரையும் முற்றிலும் இழந்து ஸ்வீப் வாங்கியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ODI, Pakistan cricket, West indies