முகப்பு /செய்தி /விளையாட்டு / Pak vs WI 2nd ODI-பாபர் அசாம் மிகப்பெரிய சாதனை- வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது பாகிஸ்தான்

Pak vs WI 2nd ODI-பாபர் அசாம் மிகப்பெரிய சாதனை- வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது பாகிஸ்தான்

பாபர் அசாம் இன்னொரு பெரிய சாதனை!

பாபர் அசாம் இன்னொரு பெரிய சாதனை!

முல்டானில் நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்று கைப்பற்றியது, முதல் போட்டியில் சதமெடுத்து பெரிய இலக்கை அனாயாசமாக விரட்டிய கேப்டன் பாபர் அசாம், நேற்று 93 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து பெரிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

முல்டானில் நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்று கைப்பற்றியது, முதல் போட்டியில் சதமெடுத்து பெரிய இலக்கை அனாயாசமாக விரட்டிய கேப்டன் பாபர் அசாம், நேற்று 93 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து பெரிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

பொதுவாக மட்டைப் பிட்சாக இருக்கும் பாகிஸ்தானில் டாஸ் வென்ற பாபர் அசாம் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்ய அந்த அணி மீண்டும் இமாம் உல் ஹக் (72), பாபர் அசாம் (77) கூட்டணியுடன் 187/2 என்று 36வது ஓவரில் இருந்தது. ஆனால் அதன் பிறகு அகீல் ஹுசைன் (3/52), ஜோசப் (2/33), ஆண்டர்சன் பிலிப் (2/50) ஆகியோரினால் மட்டுப்படுத்தப்பட்டு கடைசியில் 50 ஓவர்களில் 275/8 என்று முடிந்தது.

தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் அணியில் ஒருவர் கூட அரைசதம் எடுக்கவில்லை. ஷர்மா புரூக்ஸ் மட்டுமே அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார். நிகோலஸ் பூரன் 25 ரன்கள் எடுத்தார், பாகிஸ்தான் தரப்பில் முகமது வாசிம் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற மொகமது நவாஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார், சதாப் கான் 2 விக்கெட்டுகள், மே.இ.தீவுகள் 32.2 ஓவர்களில் 155 ரன்கள் என்று முடிந்தது. தொடரை 0-2 என்று இழந்தது.

பாபர் அசாம் பெரிய சாதனை:

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் பாபர் மற்றொரு பெரிய சாதனையை எட்டினார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியில் 93 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார், மேலும் ஒரு ஐம்பது பிளஸ் ஸ்கோருடன், அவர் மிகப்பெரிய பேட்டிங் சாதனைக்கான புத்தகங்களில் இடம்பெற்றார்.

சர்வதேச கிரிக்கெட்டில் பாபரின் தொடர்ச்சியான ஒன்பதாவது அரைசதம் ஆகும் இது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் இரண்டாவது டெஸ்டின் போது 196 ரன்களுடன் பாபரின் இந்த சாதனை தொடர்ச்சி தொடங்கியது, அதைத் தொடர்ந்து மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்டில் 66 மற்றும் 55 ரன்கள் எடுத்தார் பாபர் அசாம்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ODI தொடரில், பாபர் இரண்டு சதங்களை அடித்தார், மூன்று ஆட்டங்களில் 57, 114 மற்றும் 105* ரன்களை பதிவு செய்தார். ஆரோன் ஃபிஞ்ச் அணிக்கு எதிரான ஒரே டி20 போட்டியில், பாபர் 66 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் கேப்டன், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில், முதல் போட்டியில் சதம் அடித்து (103) இப்போது நேற்று 2வது ஒருநாள் போட்டியில் 77 ரன்களை எடுத்து 9 அரைசத+ ஸ்கோரை தொடர்ச்சியாக எடுத்து சாதனை புரிந்துள்ளார்.

ஏற்கெனவே பாகிஸ்தான் முன்னாள் வீரர் சலீம் மாலிக் 10 அரைசதங்களை ஒரு காலத்தில் தொடர்ச்சியாக விளாசியது குறிப்பிடத்தக்கது, அந்தச் சாதனையை பாபர் உடைப்பார் என்று தெரிகிறது. தற்செயலாக, பாபர் முதல் ஒருநாள் ஆட்டத்தில் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலியை கடந்தார், 13 ஆட்டங்களில் மட்டுமே பாகிஸ்தானின் கேப்டனாக 1000 ரன்களை எட்டினார். இதன் மூலம், ஐம்பது ஓவர் வடிவத்தில் இந்த எண்ணிக்கையை மிக வேகமாக எட்டிய கேப்டன் என்ற பெருமையை பெற்றார்.

First published:

Tags: Babar Azam, Pakistan cricket