கால்லே டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று 4 ரன்கள் என்ற மெலிதான ஒருமுன்னிலை பெற்ற இலங்கை அணி பிறகு 2வது இன்னிங்சில் பாகிஸ்தானுக்கு எதிராக சற்று முன் வரை 8 விக்கெடுகள் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்து பாகிஸ்தானை வெல்வதற்கான அடித்தளம் அமைத்துள்ளது.
நேற்று பாபர் அசாம் அருமையான சதம் எடுத்து 119 ரன்கள் எடுக்க மற்ற அனைத்து பாகிஸ்தான் வீரர்களும் சேர்ந்து 99 ரன்களையே எடுத்தனர். பிரபத் ஜெயசூரியா 5 விக்கெட்டுகள் எடுத்தார், இவரை பாகிஸ்தானால் ஆட முடியவில்லை. அதே போல் பாகிஸ்தானின் இடது கை ஸ்பின்னர் முகமது நவாஸையும் இலங்கையினால் ஆட முடியவில்லை, அவர் இலங்கையின் 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இலங்கையின் 2வது இன்னிங்சில் யாசிர் ஷா வீசிய லெக் ஸ்பின் பந்து ஒன்று ஷேன் வார்னின் மைக் கேட்டிங் ஆஃப் ஸ்டம்ப்பைப் பெயர்த்த மகாபெரிய டர்ன் போல் டர்ன் ஆகி ஸ்டம்பைப் பெயர்க்க ஷேன் வார்ன் நினைவு வராதவர்கள் இருக்க மாட்டார்க்ள். யாசிர் ஷா வீசிய பந்து கடுமையாகத் திரும்பியதைப் பார்த்த்து ஷாக் ஆகிப் போன குசல் மெண்டிஸ் தான் பவுல்டு ஆவதைத் தானே வெறுமனே வேடிக்கை பார்க்க நேர்ந்தது. குசல் மெண்டீசுக்கு யாசிர் ஷா வீசிய பால் ஆஃப் த செஞ்சுரியின் வீடியோ இதோ:
— 🏏Flashscore Cricket Commentators (@FlashCric) July 18, 2022
முன்னதாக யாசிர் ஷா, அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பாகிஸ்தானின் 5வது பவுலர் ஆனார். அப்துல் காதிரைக் கடந்தார்.
இலங்கை அணி 3ம் நாளான இன்று இன்னும் குறைந்தது 10 ஓவர்கள் இருக்கையில் தன் 2வது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்து மொத்தமாக 322 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. சண்டிமால் 81 ரன்களுடன் ஆடி வருகிறார்.
பாகிஸ்தான் இந்தப் போட்டியை ஜெயிக்க பிரம்மப் பிரயத்னம் செய்தாலும் முடியாது ஏனெனில் பிட்சில் ஸ்பின் நன்றாக எடுக்கிறது.
Published by:Muthukumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.