ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

தொடர் தோல்வியில் இருந்து மீளுமா பாகிஸ்தான்? நியூசிலாந்து உடனான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

தொடர் தோல்வியில் இருந்து மீளுமா பாகிஸ்தான்? நியூசிலாந்து உடனான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணி கேப்டன்கள்

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணி கேப்டன்கள்

போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நிறுவனம் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. இதனை சோனி லைவ் ஓடிடி தளத்தில் நேரலையாக பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கராச்சியில் இன்று நடைபெறுகிறது. தொடர் தோல்வியால் பாகிஸ்தான் அணி துவண்டு போயுள்ள நிலையில், இந்த போட்டியில் இருந்து வெற்றிப்பாதைக்கு திரும்புமா என்ற எதிர்பார்ப்பில் அந்த அணியின் ரசிகர்கள் உள்ளனர். முன்னதாக இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் படுதோல்வியை சந்தித்தது. இதன்பின்னர் நியூசிலாந்து உடனான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை டிரா செய்தது.

இந்நிலையில் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இடம்பெற்ற நியூசிலாந்து அணி கடந்த ஆண்டு பங்கேற்ற 16 ஒருநாள் போட்டிகளில் 10-ல் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் முக்கிய ஆட்டக்காரரான வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிதி பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் முழங்காலில் அப்ரிதிக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் போட்டிகளில் பங்கேற்காமல் இருக்கிறார். கராச்சி தேசிய மைதானத்தில் தொடங்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மதியம் 3 மணிக்கு இந்திய நேரடிப்படி ஆரம்பமாகிறது.

நான் பேட்டிங் செஞ்சு நீங்க பாத்ததில்லைனு நினைக்கிறேன்.. சூர்யகுமார் யாதவிடம் ஜாலி செய்த டிராவிட்!

இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நிறுவனம் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. இதனை சோனி லைவ் ஓடிடி தளத்தில் நேரலையாக பார்க்கலாம்.

First published:

Tags: Cricket