ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி… நியூசிலாந்து அணி நிதான ஆட்டம்

பாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி… நியூசிலாந்து அணி நிதான ஆட்டம்

நியூசிலாந்து அணி நிதான ஆட்டம்

நியூசிலாந்து அணி நிதான ஆட்டம்

ஒரு கட்டத்தில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 239 ரன்கள் என்ற நிலையில் இருந்த நியூசிலாந்து ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 309 ரன்களை எடுத்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி நிதான ஆட்டத்தை தொடங்கியுள்ளது. இன்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 309 ரன்களை எடுத்திருக்கிறது. நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் 2ஆவது டெஸ்ட் கராச்சி மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டிம் சவுத்தி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக டாம் லாதம் மற்றும் டெவான் கான்வே களத்தில் இறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடியதால் அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்தது. 100 பந்துகளை சந்தித்த டாம் லாதம் 9 பவுண்டரிகளுடன் 71 ரன்களை எடுத்தார். முதல் விக்கெட்டிற்கு இருவரும் 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். நசீம் ஷா பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் டாம் லாதம் வெளியேற, அடுத்து வந்த கேன் வில்லியம்சன் கான்வேயுடன் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் கொடுத்தார்.

பாகிஸ்தான் பந்துவீச்சை மிக எளிதாக எதிர்கொண்ட டெவான் கான்வே சதம் அடித்து, அணியின் ஸ்கோர் உயர உதவினார். 191 பந்துகளை சந்தித்த கான்வே 1 சிக்சர் மற்றும் 16 பவுண்டரிகளுடன் 122 ரன்களை எடுத்தார். கான்வே – வில்லியம்சன் இருவரும் 2ஆவது விக்கெட்டிற்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

வில்லியம்சன் 36 ரன்களில் வெளியேற அவரைத் தொடர்ந்து ஹென்றி  நிகோல்ஸ் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த டேரில் மிட்ச்செல் 3 ரன்னிலும், மைக்கேல் பிரேஸ்வெல் ரன் ஏதும் எடுக்காமலும் பெவிலியன் திரும்பினர்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்கள் வீசப்பட்டுள்ளன. 6 விக்கெட்டுகளை இழந்துள்ள பாகிஸ்தான் 309 ரன்களை எடுத்துள்ளது.

இன்றைய ஆட்டத்தின் தொடக்கத்தில் நியூசிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தினாலும், முதல் 2 விக்கெட்டுகளுக்கு பின்னர் ஆட்டத்தின் போக்கை பாகிஸ்தான் பவுலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு மருத்துவ பரிசோதனை… விரைவில் அல் நஸ்ர் அணியில் விளையாடுகிறார்…

ஒரு கட்டத்தில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 239 ரன்கள் என்ற நிலையில் இருந்த நியூசிலாந்து ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 309 ரன்களை எடுத்துள்ளது.

‘உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் கே.எல்.ராகுல் இடம்பெற மாட்டார்’ - முன்னாள் பயிற்சியாளர் கணிப்பு

நாளை 2ஆம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. பாகிஸ்தான் தரப்பில் அகா சல்மான் 3 விக்கெட்டுகளையும், நசீம் ஷா 2 விக்கெட்டுகளையும், அப்ரார் அகமது 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

First published:

Tags: Cricket