ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

சதம் அடித்த டெவோன் கான்வே… பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் நியூசிலாந்து அணி ஆதிக்கம்…

சதம் அடித்த டெவோன் கான்வே… பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் நியூசிலாந்து அணி ஆதிக்கம்…

கேன் வில்லியம்சன் - டெவோன் கான்வே

கேன் வில்லியம்சன் - டெவோன் கான்வே

உள்ளூரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்திருப்பதால் பாகிஸ்தான் அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் நியூசிலாந்து அணி வீரர் டெவோன் கான்வே சதம் அடித்துள்ளார். இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை மிக எளிதாக நியூசிலாந்து அணி எதிர்கொண்டு ரன்களை சேர்த்து வருகிறது. நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் 2ஆவது டெஸ்ட் கராச்சி மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டிம் சவுத்தி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக டாம் லாதம் மற்றும் டெவான் கான்வே களத்தில் இறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடியதால் அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்தது. 100 பந்துகளை சந்தித்த டாம் லாதம் 9 பவுண்டரிகளுடன் 71 ரன்களை எடுத்தார். முதல் விக்கெட்டிற்கு இருவரும் 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். நசீம் ஷா பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் டாம் லாதம் வெளியேற, அடுத்து வந்த கேன் வில்லியம்சன் கான்வேயுடன் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் கொடுத்தார்.

பாகிஸ்தான் பந்துவீச்சை மிக எளிதாக எதிர்கொண்ட டெவான் கான்வே சதம் அடித்து, அணியின் ஸ்கோர் உயர உதவினார். 191 பந்துகளை சந்தித்த கான்வே 1 சிக்சர் மற்றும் 16 பவுண்டரிகளுடன் 122 ரன்களை எடுத்தார். கான்வே – வில்லியம்சன் இருவரும் 2ஆவது விக்கெட்டிற்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

முதல் போட்டியைப் போலவே 2ஆவது டெஸ்டிலும் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை விடவும் சிறப்பாக விளையாடி வருகிறது. பாகிஸ்தான் அணியில் 5 பவுலர்கள் மாற்றி மாற்றி பந்து வீசிய நிலையில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா 2 விக்கெட்டுகளையும், அகா சல்மான் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

‘அழகான காரை வைத்திருக்கலாம்… அதைவிட உங்கள் உயிர் முக்கியம்’ – ரிஷப் பந்திற்கு ஏற்பட்ட விபத்து குறித்து கபில் தேவ் உருக்கம்…

இந்த டெஸ்டில் வெற்றி பெரும் அணி தொடரை கைப்பற்றும். உள்ளூரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்திருப்பதால் பாகிஸ்தான் அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

உலகக்கோப்பைக்கு வந்தால் ஐபிஎல் வேண்டாம்.. இந்திய வீரர்களுக்கு புது ரூல் போடும் பிசிசிஐ!

இதையடுத்து அணியின் தேர்வுக்குழு முன்னாள் வீரர் அப்ரிதி தலைமையில் மாற்றி அமைக்கப்பட்டது. இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற பாகிஸ்தான் அணி முனைப்பு காட்டி வருகிறது.

First published:

Tags: Cricket