ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

டி20 உலகக்கோப்பை அரையிறுதி : பாகிஸ்தான் அணிக்கு 153 ரன்கள் இலக்கு

டி20 உலகக்கோப்பை அரையிறுதி : பாகிஸ்தான் அணிக்கு 153 ரன்கள் இலக்கு

நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்

நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்

பாகிஸ்தான் அணியின் அபார பந்துவீச்சால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • internati, Indiasydneysydney

     டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு  நியூசிலாந்து அணி  153 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி போட்டிகள் தொடங்கியுள்ளது. இதில் முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் -நியூசிலாந்து அணிகள் மோதின. சிட்னி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை  தேர்வு செய்தது.

    அதன்படி நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பின் அலன் முதல் ஓவரிலே ஷாகின் அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். கான்வே 21 ரன்கள் எடுத்திருந்தபோது 21 ரன்களில் ரன் ஆவுட் ஆகி வெளியேறினார். நியூசிலாந்து அணியில் இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வந்த பிலிப்ஸ் 6 ரன்களில் வெளியேற அந்த அணி 49 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து திணறியது.

    தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் வில்லியன்சன் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். கடைசி வரை சிறப்பாக விளையாடிய மிட்செல்  அரைசதம் அடித்து அணியின் சரிவை சரிகட்டினார். 35 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

    இதையும் படிங்க:  இந்திய தேசிய கொடியில் ஆட்டோகிராப் போட்ட பாகிஸ்தான் வீரர் : இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

    இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டை  இழந்து  152 ரன்களை எடுத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஷாகித் அப்ரிடி 2 விக்கெட்டையும் முகமது நவாஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

    Published by:Arunkumar A
    First published:

    Tags: Pakistan vs New zealand, T20 World Cup