ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

PAK vs NZ: தொடக்கமே நியூசிலாந்துக்கு அதிர்ச்சி.. டி20 அரையிறுதியை அசத்தலாக தொடங்கிய பாகிஸ்தான்!

PAK vs NZ: தொடக்கமே நியூசிலாந்துக்கு அதிர்ச்சி.. டி20 அரையிறுதியை அசத்தலாக தொடங்கிய பாகிஸ்தான்!

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு

நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 3-வது முறையாக  இறுதிப்போட்டிக்குள் நுழையும் திட்டத்தில்  இருக்கிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • international, Indiasydneysydneysydneysydney

  பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.

  8வது டி20 உலககோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. சூப்பர்12 சுற்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அரையிறுதி சுற்று போட்டிகள் இன்று தொடங்குகிறது. கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. கடந்த உலக கோப்பையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நியூசிலாந்து ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை இழந்தது.

  பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 3-வது முறையாக  இறுதிப்போட்டிக்குள் நுழையும் திட்டத்தில்  இருக்கிறது. அந்த அணி இதற்கு முன்பு 2007, 2009-ம் ஆண்டுகளில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருந்தது. இதில் 2009-ல் இலங்கையை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. 2007-ல் இந்தியாவிடம் தோல்வியடைந்தது.

  இதையும் படிங்க:’அடேய் கேமராமேன்... இதெல்லாம் பாக்க மாட்டீயாடா’ - வீடியோவுக்கு அஷ்வின் போட்ட பதில் ட்வீட்!

  இந்த நிலையில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இரு அணிகளிலும் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் தான் இந்த போட்டியில் களமிறங்கியது. எதிர்பார்ப்புடன் ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.

  அதன் படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் பின் அலன் மற்றும் கான்வே தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரிலே 4 ரன் எடுத்திருந்த பின் அலனை ஷாகின் அப்ரிடி விக்கெட் எடுத்து வெளியேற்றினார்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Pakistan cricket, Pakistan vs New zealand, Sydney, T20 World Cup