ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்… முதல் இன்னிங்ஸில் நியூசி. 449 ரன்கள் குவிப்பு

பாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்… முதல் இன்னிங்ஸில் நியூசி. 449 ரன்கள் குவிப்பு

நியூசிலாந்து வீரர் மேட் ஹென்றி

நியூசிலாந்து வீரர் மேட் ஹென்றி

கடைசி விக்கெட்டுக்கு நியூசிலாந்து அணியின் மேட் ஹென்றி – அஜாஸ் படேல் இணை 104 ரன்களை சேர்த்து சாதனை படைத்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 449 ரன்களை குவித்துள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை தொடங்கியுள்ளது. நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் 2ஆவது டெஸ்ட் கராச்சி மைதானத்தில் நேற்று தொடங்கியுள்ளது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டிம் சவுத்தி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக டாம் லாதம் மற்றும் டெவான் கான்வே களத்தில் இறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடியதால் அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்தது. 100 பந்துகளை சந்தித்த டாம் லாதம் 9 பவுண்டரிகளுடன் 71 ரன்களை எடுத்தார். முதல் விக்கெட்டிற்கு இருவரும் 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். நசீம் ஷா பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் டாம் லாதம் வெளியேற, அடுத்து வந்த கேன் வில்லியம்சன் கான்வேயுடன் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் கொடுத்தார்.

பாகிஸ்தான் பந்துவீச்சை மிக எளிதாக எதிர்கொண்ட டெவான் கான்வே சதம் அடித்து, அணியின் ஸ்கோர் உயர உதவினார். 191 பந்துகளை சந்தித்த கான்வே 1 சிக்சர் மற்றும் 16 பவுண்டரிகளுடன் 122 ரன்களை எடுத்தார். கான்வே – வில்லியம்சன் இருவரும் 2ஆவது விக்கெட்டிற்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

வில்லியம்சன் 36 ரன்களில் வெளியேற அவரைத் தொடர்ந்து ஹென்றி  நிகோல்ஸ் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த டேரில் மிட்ச்செல் 3 ரன்னிலும், மைக்கேல் பிரேஸ்வெல் ரன் ஏதும் எடுக்காமலும் பெவிலியன் திரும்பினர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்கள் வீசப்பட்டுள்ளன. 6 விக்கெட்டுகளை இழந்துள்ள பாகிஸ்தான் 309 ரன்களை எடுத்திருந்தது.

இன்றைய 2 ஆம் நாள் ஆட்டத்திலும் நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடியது. கைவசம் 4 விக்கெட்டுகள் இருந்தபோதிலும், அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர்.

குறிப்பாக கடைசி விக்கெட்டுக்கு நியூசிலாந்து அணியின் மேட் ஹென்றி – அஜாஸ் படேல் இணை 104 ரன்களை சேர்த்து சாதனை படைத்தது. ஹென்றி 81 பந்துகளில் 2 சிக்சர் 8 பவுண்டரியுடன68 ரன்கள் எடுத்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக சேத்தன் சர்மா தொடர்வார் என தகவல்

அஜாஸ் படேல் 78 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 35 ரன்களை சேர்த்தார். இந்த இன்னிங்ஸில் பாகிஸ்தான் மொத்தம் 8 எக்ஸ்ட்ராக்களை வழங்கியுள்ளது.

Ind vs SL | ஹர்டிக் பாண்டியா தலைமையில் களமிறங்கும் இளம் இந்திய அணி... Playing XI இது தான்?

பாகிஸ்தான் பவுலர்கள் அப்ரார் அகமது 4 விக்கெட்டுகளையும், அகா சல்மான், நசீம் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தற்போது பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.

First published:

Tags: Cricket