ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

சதம் அடித்த பாபர் ஆசம்… நியூஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் நிதான ஆட்டம்

சதம் அடித்த பாபர் ஆசம்… நியூஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் நிதான ஆட்டம்

பாபர் ஆசம்

பாபர் ஆசம்

பாபர் ஆசம் – சர்ப்ராஸ் அகமது இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது. இருவரும் 5ஆவது விக்கெட்டுக்கு 196 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி நிதமானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் சதம் அடித்து அணியின் ஸ்கோர் உயர உதவினார். அவரும் விக்கெட் கீப்பர் சர்ப்ராஸ் அகமதுவும் இணைந்து 5ஆவது விக்கெட்டிற்கு 196 ரன்கள் பார்ட்னர்ஷிப் ஏற்படுத்தினர்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடயிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக பாகிஸ்தானில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

இதில் 3 போட்டிகளிலுமே பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததால் வீரர்கள் மீது அந்நாட்டு ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றி மீண்டும் வெற்றிப் பாதைக்கு செல்லும் முனைப்பில் பாகிஸ்தான் அணி உள்ளது. இந்நிலையில் இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

பாகிஸ்தானில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நியூசிலாந்து கிரிக்கெட் அணி… வைரல் வீடியோ

நியூசிலாந்து அணியில் கேப்டன்ஷிப்பில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. கேன் வில்லியம்சனுக்கு பதிலாக டிம் சவுத்தி கேப்டனாக செயல்படுகிறார்.

முதல் இன்னிங்ஸில் களம் இறங்கிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் மோசமான தொடக்கத்தை அளித்தனர். அப்துல்லா சபிக் 7ரன்னிலும், இமாம் உல் ஹக் 24 ரன்களிலும், அடூத்துவந்த ஷான் மசூத் 3 ரன்களிலும் வெளியேறினர். 3விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் 48 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது.

இதன்பின்னர் இணைந்த பாபர் ஆசம் – சாவுத் சகீல் இணை நிதானமாக விளையாடி விக்கெட் இழப்பை சரிக்கட்ட தொடங்கியது. சகீல் 22 ரன்கள் எடுத்திருந்தேபோது ஆட்டமிழந்தார்.

அடுத்து இணைந்த பாபர் ஆசம் – சர்ப்ராஸ் அகமது இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது. இருவரும் 5ஆவது விக்கெட்டுக்கு 196 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இறுதியில் 86 ரன்கள் எடுத்திருந்தபோது சர்ப்ராஸ் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் கேப்டன் பாபர் ஆசம் சதத்தை கடந்து 161 ரன்களை எடுத்து களத்தில் இருக்கிறார். இதில் 9 பவுண்டரிகள் அடங்கும்.

நேற்றைய முதல்நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 317 ரன்களை எடுத்திருக்கிறது. நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் படேல், மிட்செல் பிரேஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.

First published:

Tags: Cricket, Pakistan cricket