நெதர்லாந்து ராட்டர்டாமில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஆனால் நெதர்லாந்து அணி சும்மா விடவில்லை, பாகிஸ்தானின் 314/6க்கு எதிராக 298/8 வரை வந்து போராடி தோல்வி தழுவியது.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியில் பகர் ஜமான் 109 ரன்களையும் பாபர் அசாம் 74 ரன்களையும் சேர்த்ததொடு இருவரும் சேர்ந்து 168 ரன்களைச் சேர்த்தனர். கடைசியில் ஷதாப் கான் 28 பந்துகளில் 48, அகா சல்மான் 16 பந்தில் 27 ரன்கள் விளாசவில்லையெனில் நெதர்லாந்து வெற்றி பெற்றாலும் பெற்றிருக்கும் என்பதே நிலைமை.
இலக்கை விரட்டிய நெதர்லாந்து அணி பிரிஸ்க்காகவே தொடங்கியது, ஆனால் ரெகுலர் இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன, விக்ரம்ஜித் சிங் (65), கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் (71), டாம் கூப்பர் (65) ஆகியோரின் அரைசதங்கள் நெதர்லாந்தின் வெற்றி ஆர்வத்தைத் தக்கவைத்தன, ஆனால் பாகிஸ்தானின் டெத் ஓவர் பவுலர்கள் மிகச்சிறப்பாக வீச நெதர்லாந்து 298/8 என்று முடிந்தது.
பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ராவுஃப், நசீம் ஷா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினாலும் இருவருமே சாத்து வாங்கினர். நெதர்லாந்து அணியில் செம அடி வாங்கிய பவுலர் லோகன் வான் பீக், இவர் 10 ஓவர் 89 ரன்களை விட்டுக் கொடுத்தார்.
நெதர்லாந்து தரப்பில் டாம் கூப்பர் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்தது. இறுதியில் நெதர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் அடித்து போராடி தோல்வி அடைந்தது. கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 71 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
நெதர்லாந்தின் சேசிங்கில் முக்கியமான விஷயம் என்னவெனில் 62/3, பிறகு 167/5 என்று 33வது ஓவரில் இருந்தனர், கடைசி 17 ஓவர்களில் 131 ரன்களை விளாசியதே, இதுதான் பாகிஸ்தனுக்கு கிலியை கொடுத்தது.
பகர் ஜமான் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Babar Azam, ODI, Pakistan cricket, Zimbabwe