• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • பாபர் ஆசம் அதிவிரைவு 14 சதங்கள்; விராட் கோலி, ஆம்லா சாதனைகள் முறியடிப்பு- சாதனைத் துளிகள்

பாபர் ஆசம் அதிவிரைவு 14 சதங்கள்; விராட் கோலி, ஆம்லா சாதனைகள் முறியடிப்பு- சாதனைத் துளிகள்

பாபர் ஆசம்

பாபர் ஆசம்

இங்கிலாந்துக்கு எதிராக நேற்று 139 பந்துகளில் 14 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் அதியற்புதமான ஒரு இன்னிங்சில் 158 ரன்களை பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் விளாசினார், ஆனால் பாவம் அவரது இன்னிங்ஸ் 331 ரன்களுக்கு பாகிஸ்தானை கொண்டு சென்றதே தவிர வெற்றி பெறச் செய்யவில்லை.

  • Share this:
    இங்கிலாந்துக்கு எதிராக நேற்று 139 பந்துகளில் 14 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் அதியற்புதமான ஒரு இன்னிங்சில் 158 ரன்களை பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் விளாசினார், ஆனால் பாவம் அவரது இன்னிங்ஸ் 331 ரன்களுக்கு பாகிஸ்தானை கொண்டு சென்றதே தவிர வெற்றி பெறச் செய்யவில்லை.

    இங்கிலாந்து 332 ரன்களை அசால்ட்டாக சேஸ் செய்து பி-அணியாக இருந்தாலும் பாகிஸ்தானுக்கு 3-0 ஒயிட்வாஷ் அளித்தது.

    இந்தப் போட்டியில் பாபர் ஆசம் நிகழ்த்திய சாதனைத் துளிகள்:

    ஒருநாள் கிரிக்கெட்டில் 150+ ஸ்கோரை எட்டிய முதல் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம்தான். இதற்கு முன்பாக சானியா மிர்சா கணவர் ஷோயப் மாலிக் இந்தியாவுக்கு எதிராக 2008-ல் 125 எடுத்ததுதான் பாகிஸ்தான் கேப்டன் ஒருவரின் அதிகபட்ச ரன் எண்ணிக்கை சாதனையாக அமைந்தது. ஜிம்பாப்வேவுக்கு எதிராக 125 ரன்கள் எடுத்தார் பாபர் ஆசம், ஆனால் அது சமன் ஆன சாதனையே.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    9 ஒரு நாள் போட்டிகளில் 3 சதங்களுடன் பாபர் ஆசம் முந்தைய கேப்டன் அசார் அலி சாதனையை சமன் செய்துள்ளார்.

    இதையும் படிங்க: England vs Pakistan| 332 ரன் இலக்கை அசால்ட்டாக விரட்டிய இங்கிலாந்து- பாகிஸ்தானுக்கு 3-0 ஒயிட் வாஷ் தோல்வி- பாபர் ஆசம் 158 ரன் வீண்

    இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டியில் 150+ ஸ்கோரை எடுத்த முதல் கேப்டனாகவும் இருக்கிறார் பாபர் ஆசம். இதற்கு முன்பாக தென் ஆப்பிரிக்கா கேப்டன் கிரேம் ஸ்மித் 141 ரன்களை எடுத்ததே அதிகபட்சம்.

    நேற்று பாபர் ஆசம் அடித்தது 14வது ஒருநாள் சதம், இதை 81 இன்னிங்ஸ்களில் எடுத்துள்ளார் பாபர் ஆசம். ஆஸ்திரேலிய பெண் கிரிக்கெட் வீராங்கனை 82 இன்னிங்ஸ்களில் 14 ஒருநாள் சதங்களை எடுத்து சாதனையை வைத்திருந்தார். ஹஷிம் ஆம்லா 84 இன்னிங்ஸ்களில் 14 சதங்களை எடுத்திருந்தார். நேற்று இன்னும் 15 ரன்களை பாபர் ஆசம் எடுத்திருந்தால் அதிவிரைவு 4,000 ஒருநாள் ரன்களுக்கான ஆம்லா சாதனையையும் முறியடித்திருப்பார்.

    பாபர் ஆசம், முகமது ரிஸ்வான் அமைத்த 179 ரன் கூட்டணி இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தானின் அதிகபட்ச கூட்டணியாகும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: