Home /News /sports /

வெறும் 300 ரன்களை வைத்துக் கொண்டு வங்கதேசத்தை பார்சல் செய்த பாகிஸ்தான்

வெறும் 300 ரன்களை வைத்துக் கொண்டு வங்கதேசத்தை பார்சல் செய்த பாகிஸ்தான்

வங்கதேசத்தை 2-0 என்று வீழ்த்திய பாகிஸ்தான்

வங்கதேசத்தை 2-0 என்று வீழ்த்திய பாகிஸ்தான்

சாஜித் கான் எனும் ஆஃப் ஸ்பின்னர் 12 விக்கெட்டுகளைக் கைப்பற்ற டாக்காவில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வங்கதேச அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 2-0 என்று கைப்பற்றியது.

    சாஜித் கான் எனும் ஆஃப் ஸ்பின்னர் 12 விக்கெட்டுகளைக் கைப்பற்ற டாக்காவில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வங்கதேச அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 2-0 என்று கைப்பற்றியது.

    ஆட்ட நாயகனாக சாஜித் கான் தேர்வானார், தொடர் நாயகனாக பேட்ஸ்மென் அபிட் அலி தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றி மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் 24 கிடைத்துள்ளது பாகிஸ்தானுக்கு. கிட்டத்தட்ட இரண்டரை நாட்கள் மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் வங்கதேசத்தை இன்னிங்ஸ் தோல்வி அடையச் செய்துள்ளது என்றால் தங்கள் பிட்ச் மூலம் தங்களுக்கே குழி தோண்டிக்கொண்டது எப்படி என்று வங்கதேசத்தை கேட்க வேண்டியதுதான்.

    பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 300 என்று டிக்ளேர் செய்ய தொடர்ந்து ஆடிய வங்கதேசம் சாஜித் கானின் பந்து வீச்சில் 87 ரன்களுக்குச் சுருண்டது. சாஜித் கான் 42 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஃபாலோ ஆன் ஆடிய வங்கதேசம் நேற்று கடைசி வரை போராடியது. முஷ்பிகுர் ரகீம் 48, லிட்டன் தாஸ் 45, ஷாகிப் அல் ஹசன் 63 என்று டிரா செய்ய போராடினர். ஆனால் மெஹதி ஹசன் மிராசை பாபர் ஆசம் வீழ்த்தி டெஸ்ட்டில் தன் முதல் விக்கெட்டைக் கைப்பற்ற ஷாகிப் அல் ஹசன் 8வது விக்கெட்டாக 77 வது ஓவரில் சாஜித் கானிடம் வெளியேற 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது, சாஜித் கான் 2வது இன்னிங்ஸிலும் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி மொத்தம் 12 விக்கெட்டுகளை இந்த டெஸ்ட்டில் கைப்பற்றினார். மெஹதி ஹசன் மிராஸ் மட்டும் அந்த நேரத்தில் பாபர் ஆசம் பந்தை ஸ்வீப் ஆடப்போய் எல்.பி.ஆகாமல் இருந்திருந்தால் நிச்சயம் டிரா செய்திருக்கலாம்.

    Also Read: விராட் கோலி அவராவே போவார்னு 48 மணி நேரம் காத்திருந்த தேர்வுக்குழு- கேப்டன்சி நீக்கப் பின்னணி

    வங்கதேசம் எப்படியாவது இருட்டும் வரை பேட் செய்து கொஞ்சம் லீட் எடுத்து விட்டாலும் பாகிஸ்தான் மீண்டும் பேட் செய்ய வாய்ப்பிருக்காது என்று நினைத்து ஆடியது, ஆனால் ஷாகிப் அல் ஹசன் ஆட்டமிழந்தவுடனேயே அந்த வாய்ப்பும் பறிபோனது. பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது, நிச்சயம் இந்தியா பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி நடக்க வேண்டும் அப்போதுதான் இரு அணிகளின் உண்மையான பலம், பலவீனம் தெரியவரும்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Bangladesh, Pakistan cricket, Test cricket

    அடுத்த செய்தி