அதிசயம் நடந்து அரையிறுதிக்கு முன்னேறுமா பாகிஸ்தான்? வங்கதேசத்துடன் இன்று மோதல்

pak vs ban | இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து, 311 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிசயம் நடந்து அரையிறுதிக்கு முன்னேறுமா பாகிஸ்தான்? வங்கதேசத்துடன் இன்று மோதல்
பாகிஸ்தான் அணி
  • News18
  • Last Updated: July 5, 2019, 8:19 AM IST
  • Share this:
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆப்கானிஸ்தான் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணி வீழ்த்தியது. இன்றைய போட்டியில், பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன.

விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், லீட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதின. இதில் 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆப்கானிஸ்தான் அணி, 288 ரன்களையே எடுத்தது. இதன்மூலம், 23 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றிபெற்றது.

வங்கதேச அணி (Image:ICC)ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறாத போதிலும், மேற்கு இந்திய தீவுகள் அணி 2-வது வெற்றியை பதிவுசெய்துள்ளது. ஆனால், ஆப்கானிஸ்தான் அணி, ஒரு போட்டியில் கூட வெற்றிபெறாமல் கடைசி இடத்தையே பிடித்துள்ளது.

இந்நிலையில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் போட்டியில், பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில், பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து, 311 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும். அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதையொட்டி, பாகிஸ்தான் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.

இதனிடையே, இந்தியா, இலங்கை அணிகள் நாளை மோதுகின்றன. இதையொட்டி, லீட்ஸ் மைதானத்தில் இலங்கை அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் படிக்க... 2019 பட்ஜெட்டில் விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன?

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading