வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்...! 16 வயதே ஆன பாக். வீரர் சாதனை

 • News18
 • Last Updated :
 • Share this:
  வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானின் 16 வயது இளம் வீரர் நசீம் ஷா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

  வாங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் பாகிஸ்தான், 44 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

  முன்னதாக முதல் இன்னிங்ஸில் விளையாடிய வங்கதேசம் 233 ரன்களும், பாகிஸ்தான் 445 ரன்களும் எடுத்தன. 212 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்தேச அணி 3ம் நாள் ஆட்டத்தில் 124 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற வலுவான நிலையில் இருந்தது. ஆட்டநேரம் முடிய 5 ஓவர்களே எஞ்சி இருந்த நிலையில் 41வது ஓவரை வீசிய பாகிஸ்தானின் இளம் வேகப்பந்துவீச்சாளர் நசீம் ஷா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.  ஓவரின் 4வது பந்தில் நசீம் ஷா, வங்கதேசத்தின் நஜ்மூல் ஹசைனையும், அடுத்தடுத்த பந்துகளில் அந்த அணியின் தைஜீல் இஸ்லாம், மகமதுல்லா ஆகியோரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதன்மூலம் இளம் வயதில் உலக டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் நாசீம்.  இதற்கு முன் 2003-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வங்கதேச வீரர் அலோக் கபாலி ஹாட்ரிக் எடுத்ததே சாதனையாக இருந்தது.

  தொடர்ந்து யாசிர் ஷா ஒரு விக்கெட் வீழ்த்த வங்கதேசம் 6 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்திருந்த போது மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியதும் வங்கதேசம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க பாகிஸ்தான் 44 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது.  அதிகபட்சமாக அந்த அணி சார்பில் நாசீம் ஷா 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளும், யாசீர் ஷா 58 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்தனர்.
  Published by:Sankar
  First published: