ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பல சாதனைகளை உடைத்த பாபர் அசாம், பாகிஸ்தான்- கராச்சி டெஸ்ட் சுவாரஸ்யங்கள்

பல சாதனைகளை உடைத்த பாபர் அசாம், பாகிஸ்தான்- கராச்சி டெஸ்ட் சுவாரஸ்யங்கள்

பாபர் அசாம்.

பாபர் அசாம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பாபர் அசாம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு நாட்களில் 10 மணி நேரத்திற்கும் மேலாக பேட்டிங் செய்து பாகிஸ்தானை பாதுகாப்பின் விளிம்பிற்கு அழைத்துச் சென்றார். கராச்சி ட்ராவின் சில சுவையான புள்ளி விவரங்கள் இதோ:

  பாபர் அசாமின் 196 மாரத்தான் இன்னிங்ஸ் பாகிஸ்தானுக்கான அதிகபட்ச நான்காவது இன்னிங்ஸ் தனிநபர் ஸ்கோர், டெஸ்ட் வரலாற்றில் 7வது அதிகபட்ச நான்காவது இன்னிங்ஸ் தனிநபர் ஸ்கோர்.

  2015ல் இலங்கைக்கு எதிராக யூனிஸ் கான் பெற்ற 171* ரன்களை முறியடித்து, ஒரு டெஸ்டின் நான்காவது இன்னிங்ஸில் பாபரின் 196 ரன், பாகிஸ்தானின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோராகும்.

  171.4 ஓவர்களில் பாகிஸ்தான் பேட் செய்தது. 2016 ஆம் ஆண்டு பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 145 ஓவர்களைத் தாண்டி, ஒரு டெஸ்டின் நான்காவது இன்னிங்ஸில் அவர்கள் பேட் செய்த மிக நீண்ட நேரம் இதுவாகும். கராச்சியில் பாகிஸ்தான் 7 விக்கெட்டுக்கு 443 ரன்கள் எடுத்தது, அதே பிரிஸ்பேன் டெஸ்டில் ஆல் அவுட் செய்யப்பட்ட 450 ரன்களுக்குப் பின்னால், அவர்களின் இரண்டாவது அதிகபட்ச நான்காவது இன்னிங்ஸ் ஸ்கோராகும் இது.

  196 பாபரின் இன்னிங்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏழாவது-அதிக நான்காவது இன்னிங்ஸ் ஸ்கோராகும், மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது இன்னிங்ஸின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன்பு 2007 ஹோபர்ட் டெஸ்டில் குமார் சங்கக்கார 192 ரன்கள் எடுத்து சாதனை படைத்திருந்தார்.

  பாபர் எதிர்கொண்ட 425 பந்துகள், டெஸ்டில் எதிர்கொண்ட பந்துகளின் அடிப்படையில் நீண்ட நான்காவது இன்னிங்ஸ், இதற்கு முன்பு 2006ல் இலங்கைக்கு எதிராக சோயிப் மாலிக் 369 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 148 ரன்கள் எடுத்ததே பாகிஸ்தான் அணிக்காக அதிக நேரம் ஆடப்பட்ட இன்னிங்ஸ் ஆகும்.

  228 பாபர் மற்றும் அப்துல்லா ஷபீக் இடையேயான பார்ட்னர்ஷிப், நான்காவது இன்னிங்ஸில் மூன்றாவது விக்கெட்டுக்கான இரண்டாவது மிக உயர்ந்த கூட்டணி மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் பாகிஸ்தானுக்கு இரண்டாவது அதிகபட்சம். 2015ல் இலங்கைக்கு எதிராக ஷான் மசூத் மற்றும் யூனிஸ் மூன்றாவது விக்கெட்டுக்கு 242 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

  நான்காவது இன்னிங்ஸில் மிட்செல் ஸ்வெப்சனின் பந்துவீச்சு எண்ணிக்கை 156 க்கு 0. அறிமுக டெஸ்டில் ஒரு பந்துவீச்சாளருக்கான மூன்றாவது மோசமான புள்ளிவிவரங்கள் இவை. அடில் ரஷித் 2015 இல் பாகிஸ்தானுக்கு எதிரான தனது முதல் இன்னிங்ஸில் விக்கெட் எதுவும் எடுக்காமல் 163 ரன்களை விட்டுக்கொடுத்தார், அதே நேரத்தில் ஜாபர் கோஹர் 2021 இல் நியூசிலாந்திற்கு எதிராக 159 ரன்களுக்கு 0 விக்கெட்டுகள்.

  2008ல் இந்தியாவுக்கு எதிராக 8 விக்கெட்டுகளை வீழ்த்திய போது ஆஸ்திரேலியா ஆஃப் ஸ்பின்னர் ஜேசன் கிரெஜா 215 ரன்களை வாரி வழங்கினார். ஸ்வெப்சன் 156 ரன்களை விட்டுக் கொடுத்தது 2வது அதிக அறிமுக வீரர் கொடுத்த ரன்களாகும்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Babar Azam, Pakistan Vs Australia