Home /News /sports /

Pak vs Aus-3 கேட்ச்களை ஆஸ்திரேலியா விட்டதால் பாகிஸ்தான் கிரேட் எஸ்கேப்

Pak vs Aus-3 கேட்ச்களை ஆஸ்திரேலியா விட்டதால் பாகிஸ்தான் கிரேட் எஸ்கேப்

கவாஜா ரிஸ்வானுக்கு விட்ட கேட்ச்.

கவாஜா ரிஸ்வானுக்கு விட்ட கேட்ச்.

கராச்சி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் தார்ச்சாலை பிட்சில் 148 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான், 2வது இன்னிங்சில் தார்ச்சாலையில் மீண்டெழுந்து 171 ஓவர்கள் விளையாடி மாரத்தான் டிரா செய்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவை வெறுப்பேற்றியது. போராடி செய்த டிராவையே பெரிய வெற்றி போல் பாகிஸ்தான் ஊடகங்கள் சித்தரிக்க, ஆஸ்திரேலிய ஊடகங்களோ விட்ட சந்தர்ப்பத்துக்காக அழுது வடிய தலைப்பிட்டுக் கொண்டிருக்கின்றன.

மேலும் படிக்கவும் ...

    ஆனால் கேட்சஸ் வின் மேட்சஸ் என்ற பழமொழிக்கேற்ப ஆஸ்திரேலியா பீல்டர்கள், ட்ராவிஸ் ஹெட், லபுஷேன், உஸ்மான் கவாஜா ஆகியோர் விட்ட மிக முக்கியமான கேட்ச்களே பாகிஸ்தானை தோல்வியிலிருந்து எஸ்கேப் ஆக்கிவிட்டுள்ளது என்றால் அது மிகையல்ல.

    பாபர் அசாமுக்கு நெருங்கிய களவியூகத்தில் சிலி மிட் ஆன் மற்றும் சில்லி மிட் ஆஃபில் ட்ராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லபுஷேன் அடுத்தடுத்த பந்துகளில் கேட்ச்களை விட்டனர், பாவம் பவுலர் ஸ்வெப்சன், கடைசியில் மிக மோசமான பவுலராக அவர் காட்சியளித்தார். ஆனால் கடைசியில் சத நாயகனான முகமட் ரிஸ்வான் கொடுத்த கேட்சை உஸ்மான் கவாஜா விட்டதுதான் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, பாபர் ஆசமுக்கு அப்போதே கேட்ச் எடுத்திருந்தால் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருக்கும்.

    அசாம் அவுட் ஆன பிறகு ரிஸ்வான் ஆபத்பாந்தவராக ஒருமுனையை இறுக்கப் பிடித்து 91 ரன்களில் இருந்த போது உஸ்மான் கவாஜா விட்ட கேட்ச் மிகக் கொடுமையானது, இது கொஞ்சம் சுலபமான கேட்ச், கவாஜா ஏன் கவர் திசைக்கு மாற்றப்பட்ட பிறகும் ஹெல்மெட்டைப் போட்டுக் கொண்டு நின்றார் என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் கேள்வி எழுப்பி வருகின்றன. ரிஸ்வான் தளர்வாக ஆட எளிதான கேட்சை தரைத்தட்டினார் கவாஜா. வர்ணனையிலிருந்த சைமன் கேட்டிச், ‘இது ஆஸ்திரேலியாவா நம்ப முடியவில்லையே, இந்த கேட்சை எடுத்திருந்தால் என்ன ஒரு திருப்புமுனை?’என்று அங்கலாய்த்து விட்டார்.

    கவாஜா இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், முதல் டெஸ்டில் 160 மற்றும் 44 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் எடுத்தார், ஆனால் சுற்றுப்பயணத்தில் அவரது ஒரே தவறு இந்த கேட்ச் ட்ராப் ஆஸ்திரேலியாவின் வெற்றி வாய்ப்பைப் பறித்தது.

    இரண்டு கோடைகாலங்களுக்கு முன்பு SCG மற்றும் பிரிஸ்பனில் இந்தியாவினால் நான்காவது இன்னிங்ஸில் இரண்டு முறை மறுக்கப்பட்ட ஆஸ்திரேலியாவுக்கு வெற்றியைத் தேடித்தர முடியாதது கவலையளிக்கும் போக்கு தொடர்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிட்னியில் நடந்த ஐந்தாவது நாளில் இங்கிலாந்தை வீழ்த்த முடியாமல் போனது. .
    Published by:Muthukumar
    First published:

    Tags: Pakistan Vs Australia, Usman Khawaja

    அடுத்த செய்தி