Home /News /sports /

24 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் கால் பதிக்கும் ஆஸ்திரேலியா- போட்டி அட்டவணை

24 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் கால் பதிக்கும் ஆஸ்திரேலியா- போட்டி அட்டவணை

ஆஸ்திரேலியா அணி

ஆஸ்திரேலியா அணி

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-0 என வென்ற ஆஸ்திரேலிய அணி, அடுத்ததாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்கிறது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட் பயணத்துக்காக பாகிஸ்தான் மண்ணை மீண்டும் மிதிக்கவுள்ளது.

    இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-0 என வென்ற ஆஸ்திரேலிய அணி, அடுத்ததாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்கிறது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட் பயணத்துக்காக பாகிஸ்தான் மண்ணை மீண்டும் மிதிக்கவுள்ளது.

    ஆஸ்திரேலியா (CA) மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) வெள்ளிக்கிழமையன்று ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை உறுதி செய்தது. ராவல்பிண்டியில் முதல் டெஸ்ட் போட்டி மார்ச் 4 அன்று தொடங்கும் என்பதை உறுதிப்படுத்தியது. இது 1998 க்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியாவின் முதல் பயணமாகும். நடக்க உள்ளது.

    24 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானுக்கு செல்லும் ஆஸ்திரேலிய அணி, 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டி கொண்ட தொடரில் ஆடுகிறது.

    பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் ஆடுவதை தவிர்த்துவந்த சர்வதேச கிரிக்கெட் அணிகள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக பாகிஸ்தானுக்கு செல்ல ஆரம்பித்துள்ளன. அந்தவகையில், ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சென்று நீண்ட தொடரில் ஆடுகிறது.

    ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் ஒயிட்-பால் வீரர்கள் மார்ச் 24 அன்று லாகூர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வந்தவுடன் ஒரு நாள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு, அவர்கள் மற்ற உறுப்பினர்களுடன் ஒருங்கிணைத்து, மார்ச் 29 அன்று ராவல்பிண்டியில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டிக்காக இஸ்லாமாபாத்திற்குச் செல்வார்கள்.

    வரும் மார்ச் 4ம் தேதி தொடங்கும் இந்த தொடர் ஏப்ரல் 5ம் தேதி முடிவடைகிறது. இந்த தொடருக்கான முழு போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். அதை பார்ப்போம்.

    முதல் டெஸ்ட்: மார்ச் 4-8 (ராவல்பிண்டி)

    2வது டெஸ்ட் : மார்ச் 12-16 (கராச்சி)

    3வது டெஸ்ட்: மார்ச் 21-25 (லாகூர்)

    முதல் ஒருநாள்: மார்ச் 29 (ராவல்பிண்டி)

    2வது ஒருநாள் : மார்ச் 31 (ராவல்பிண்டி)

    3வது ஒருநாள்: ஏப்ரல் 2 (ராவல்பிண்டி)

    டி20: ஏப்ரல் 5 (ராவல்பிண்டி)

    ஏப்ர்ல் 6, ஆஸ்திரேலியா அணி நாடு திரும்புகிறது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Australia, Pakistan cricket

    அடுத்த செய்தி