முகப்பு /செய்தி /விளையாட்டு / Pak vs Aus-கவாஜா அபார சதம்- கமின்ஸ் சவால் டிக்ளேர்- சவாலை ஏற்று விரட்டுவாரா பாபர் அசாம்

Pak vs Aus-கவாஜா அபார சதம்- கமின்ஸ் சவால் டிக்ளேர்- சவாலை ஏற்று விரட்டுவாரா பாபர் அசாம்

உஸ்மான் கவாஜா

உஸ்மான் கவாஜா

லாகூர் டெஸ்ட் போட்டியின் 4-ம் நாளான இன்று ஆஸ்திரேலியா தன் 2வது இன்னிங்சில் 227/3 என்று டிக்ளேர் செய்தது, இதனையடுத்து பாகிஸ்தானுக்கு வெற்றி இலக்கு 351 ரன்களாக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. மிகவும் தைரியமாக ஆஸ்திரேலியா கேப்டன் கமின்ஸ் டிக்ளேர் செய்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமுக்கு சவால் விடுத்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

லாகூர் டெஸ்ட் போட்டியின் 4-ம் நாளான இன்று ஆஸ்திரேலியா தன் 2வது இன்னிங்சில் 227/3 என்று டிக்ளேர் செய்தது, இதனையடுத்து பாகிஸ்தானுக்கு வெற்றி இலக்கு 351 ரன்களாக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. மிகவும் தைரியமாக ஆஸ்திரேலியா கேப்டன் கமின்ஸ் டிக்ளேர் செய்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமுக்கு சவால் விடுத்துள்ளார்.

பிரிஸ்பனில் இந்தியா கடைசி நாளில் 329 ரன்கள் இலக்கை எதிர்த்து வெற்றி கண்டது, இருந்த போதிலும் கமின்ஸ் தைரியமாக டிக்ளேர் செய்துள்ளார், இந்த தைரியம் சொத்தை வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராகக் கூட இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டுக்கு வரவில்லை என்பதால்தான் அந்த அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ட்ரா செய்துள்ளது.

கவாஜா மீண்டும் ஒரு அபார இன்னிங்சில் 104 ரன்களை 178 பந்துகளில் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். வார்னர் 51 ரன்களில் ஷாஹின் அஃப்ரீடியின் அதியற்புத ரிவர்ஸ் ஸ்விங்குக்கு பவுல்டு ஆனார். லபுஷேன் மீண்டும் 36 ரன்கள் எடுத்து நவ்மன் அலி பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

இளம் வேகப்புயல் நசீம் ஷாவிடம் ஸ்மித் 17 ரன்களில் ரிஸ்வானிடம் எட்ஜ் ஆகி வெளியேறிய போது 216/3 என்று இருந்தது, கவாஜா ஏற்கெனவே சதம் அடித்திருந்தார் ட்ராவிஸ் ஹெட் இறங்கி ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸ் விளாச ஸ்கோர் 227/3 என்று வந்தவுடன் டிக்ளேர் என்றார்.

அன்று பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் அதிர்ச்சிகரமாக 20 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 268 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதையடுத்து 123 ரன்கள் பின் தங்கியது, ஆஸ்திரேலியா 227/3 டிக்ளேருடன் சேர்ந்து 350 ரன்கள் முன்னிலையில் டிக்ளேர் செய்ய தற்போது பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 37/0 என்று உள்ளது.

top videos

    4ம் நாளான இன்று இன்னும் 12-15 ஓவர்கள் மீதமுள்ளன, நாளை 90 ஓவர்கள் உள்ளன, பாகிஸ்தான் வெற்றி பெற இன்னும் 314 ரன்கள் தேவை மனமிருந்தால் மார்க்கம் உண்டு., ஆனல் இந்தியாவிடம் ஒரு ரிஷப் பண்ட் இருந்தார், பாகிஸ்தானில் அப்படி யாராவது இருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் பாகிஸ்தானை நம்பமுடியாது.

    First published:

    Tags: Aus vs Pak, Pakistan Vs Australia, Usman Khawaja