ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஸ்டார்க் ரிவர்ஸ் ஸ்விங் அற்புதம்! 148 ரன்களுக்குச் சுருண்டது பாகிஸ்தான் -  ஃபாலோ ஆன் கொடுக்காமல் ஆஸ்திரேலியா அதிசயம்

ஸ்டார்க் ரிவர்ஸ் ஸ்விங் அற்புதம்! 148 ரன்களுக்குச் சுருண்டது பாகிஸ்தான் -  ஃபாலோ ஆன் கொடுக்காமல் ஆஸ்திரேலியா அதிசயம்

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் 3ம் நாள் பாகிஸ்தான் 148 ஆல் அவுட்.

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் 3ம் நாள் பாகிஸ்தான் 148 ஆல் அவுட்.

கராச்சியில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்ஸை 556/9 என்று டிக்ளேர் செய்தது, தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் பிட்சில் ஒன்றுமில்லாவிட்டாலும் மிட்செல் ஸ்டார்க்கின் அதியற்புத ரிவர்ஸ் ஸ்விங் பவுலிங்குக்கு 148 ரன்கள்  எடுத்து ஆல் அவுட் ஆனது. 408 ரன்கள் என்ற இமாலய முன்னிலையிலும் ஆஸ்திரேலியா மீண்டும் பேட் செய்ய முடிவெடுத்துள்ளது. 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

கராச்சியில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்ஸை 556/9 என்று டிக்ளேர் செய்தது, தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் பிட்சில் ஒன்றுமில்லாவிட்டாலும் மிட்செல் ஸ்டார்க்கின் அதியற்புத ரிவர்ஸ் ஸ்விங் பவுலிங்குக்கு 148 ரன்கள்  எடுத்து ஆல் அவுட் ஆனது. 408 ரன்கள் என்ற இமாலய முன்னிலையிலும் ஆஸ்திரேலியா மீண்டும் பேட் செய்ய முடிவெடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா தன் முதல் இன்ன்ங்சில் 556/9 டிக்ளேர், ஆகவே ஆஸ்திரேலியா 408 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

கேப்டன் பாபர் அசாம் 79 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்து அறிமுக லெக் ஸ்பின்னர் ஸ்வெப்சன் இடம் விக்கெட்டைக் கொடுத்து 9வது விக்கெட்டாக விழுந்தார். ஸ்வெப்சன் முதல் விக்கெட்டாக பிரைஸ் விக்கெட் பாபர் ஆசம் விழுந்தார்.

கடைசி விக்கெட்டுக்காக நவ்மன் அலி மற்றும் ஷாஹின் அப்ரீடி 30 ரன்கள் கூட்டணி அமைத்தனர். நவ்மன் அலி 20 ரன்களையும் ஷாஹின் அஃப்ரீடி 3 சிக்ஸ் ஒரு பவுண்டரியுடன் 19 ரன்களையும் எடுத்தனர். மொத்தம் 53 ஓவர்களையே சந்தித்த பாகிஸ்தான் 148 ரன்களுக்கு சுருண்டது.

இரண்டாவது டெஸ்டின் மூன்றாவது நாளில் ஒரு அதி சுறுசுறுப்பான  இரண்டாவது செஷனில் இடைவிடாத ஆஸ்திரேலிய தாக்குதல் பாகிஸ்தானின் பேட்டிங் ஆர்டரை  கிழித்துத் தொங்க விட்டது. ஆஸ்திரேலிய வேகப்பந்து கூட்டணியான  மிட்செல் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ் அற்புதமான ரிவர்ஸ் ஸ்விங்கை உருவாக்கி பாகிஸ்தான் பேட்டிங்கை நிலைகுலையச் செய்தனர்.

ஆஸ்திரேலியாவின் மாரத்தான் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுக்கு 556 ரன்கள் எடுத்த நிலையில்,  பாகிஸ்தான் 8 விக்கெட் இழப்புக்கு 102 ரன்களுக்கு ஆடி வருகிறது.  ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸின் ரிவர்ஸ் ஸ்விங்கிற்கு எதிராக பாகிஸ்தான் நொறுங்கியது. பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தனி ஒருவராக ஒரு முனையில் போராடி வருகிறார்.

3ம் நாளிலும் பேட்டிங்கை ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆடியதில் பாட் கமின்ஸ் கேப்டன்சி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அதுதான் மாஸ்டர் ஸ்ட்ரோக்.  ராவல் பிண்டி போல் செத்த பிட்ச் அல்ல இது, இங்கு கொஞ்சம் மாறுபடும் பவுன்ஸ் மற்றும் ரிவர்ஸ் ஸ்விங் எடுத்தது. மார்னஸ் லபுஷேனே லெக் ஸ்பின் போடாமல் ஸீம் பவுலிங் செய்தார்.

150 கிமீ/93 மைல் வேகத்தில் வீசிய ஸ்டார்க்கிடம் தொடர்ச்சியான பந்துகளில் விக்கெட்டுகளால் 62 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த ஒரு திகில் செஷனின் போது பாகிஸ்தானின் வலிமையான ஒரு பதிலை அளிக்கும் இன்னிங்ஸ் என்பது கைவிட்டுப் போனது.

ஜோஷ் ஹேசில்வுட்டிற்கு பதில் தனது தேர்வை நியாயப்படுத்தும் வகையில், ஸ்டார்க் தனது வேகமான பந்துவீச்சிற்காக முதல் டெஸ்ட் சதநாயகன் அசார் அலியின் விக்கெட்டைப் பெற்றார், அவர் இரண்டாவது ஸ்லிப்பில் கேமரூன் கிரீனிடம் கேட்ச் ஆனார். வைடு பந்தை எட்ஜ் செய்தார்.

இந்தத் தொடரில் பேட்டர் எதிர்கொண்ட முதல் பந்தில் படுபயங்கரமான யார்க்கரில் ஒரு கோல்டன் டக்கிற்கு ஃபவாத் ஆலம் விக்கெட்டை எல்பிடபிள்யூ முறையில் வீழ்த்தினார். ராவல்பிண்டியில் விக்கெட் இல்லாமல் போன  மிட்செல் ஸ்டார்க், முகமது ரிஸ்வானை ஒரு  ஆஃப் சைடு குட் லெந்த் பந்து வீச்சில் எட்ஜ் தாண்டிச் சென்றபோது அவர் ஹாட்ரிக் சாதனையை கிட்டத்தட்ட முடித்திருப்பார், தப்பினார் ரிஸ்வான்.

ரிஸ்வான் பின்னர் கம்மின்ஸுக்கு எதிராக சரி தடவு தடவினார். அவர் முதல் ஸ்லிப்பில் ஸ்டீவன் ஸ்மித்துக்கு  கடினமான வாய்ப்பை கோட்டை விட்டார் ஸ்மித்.  அவர் ஷாட் ஆடாததால் அடுத்த பந்திலேயே எல்பிடபிள்யூ ஆக்கப்பட்டார், ஆனால் ரிவியூவில்  முடிவு ரத்து செய்யப்பட்டது.

ஆனால், அடுத்த ஓவரிலேயே ரிஸ்வானை காலி செய்தார் பாட் கமின்ஸ். பிறகு க்ரீன் தன் முதல் அன்னிய மண் விக்கெட்டைக் கைப்பற்றினார். இவர் ஃபாஹிம் அஷ்ரபை  எல்.பி.ஆக்கினார். மீண்டும் மிட்செல் ஸ்டார்க் சாஜித் கானை வீழ்த்தினார்.

அப்துல்லா ஷபீக் (13), தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். அங்கு ரன்னே இல்லை. ஸ்வெப்சன் தன் அறிமுக டெஸ்ட்டிலேயே பேக்வர்ட் பாயிண்டிலிருந்து நேரடியாக ஸ்டம்பை சாய்த்தார். 20 ரன்னில் இமாம் உல் ஹக் நேதன் லயன் பந்தை தூக்கி அடிக்கிறேன் பேர்வழி என்று பாட் கமின்ஸிடம் கேட்ச் ஆனார். விக்கெட்டை தூக்கி எறிந்தார்.

முன்னதாக இறுதியாக 189 ஓவர்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸை கம்மின்ஸ் டிக்ளேர் செய்தார். மூன்றாவது நாளில் பாகிஸ்தான் 35 நிமிடங்களுக்கு மிகவும் கஷ்டப்பட்டது.  கம்மின்ஸ் 34 ரன்களை 3 சிக்ஸர்களுடன் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்,  கடைசியாக சிக்ஸ் அடித்த போது  இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. ஸ்வெப்சன் ஆட்டமிழக்காமல் 15 ரன்களை முடித்தார். இருவரும் ஆட்டமிழக்காமல் அரைசதக் கூட்டணி அமைத்தார்.

ஆஸ்திரேலியா 556/9.  பாகிஸ்தான் 148 ஆல் அவுட். ஆஸ்திரேலியா மீண்டும் பேட் செய்கிறது. இன்று 3ம் நாள் ஆட்டத்தில் இன்னும் குறைந்தது 24 ஓவர்கள் மீதமுள்ளன.

ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகள், கமின்ஸ், லயன், கிரீன் தலா 1 விக்கெட்டையும் அறிமுக ஸ்பின்னர் ஸ்வெப்சன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

First published:

Tags: Australia, Pakistan cricket