Home /News /sports /

Babar Azam: 32 ஆண்டு கால சாதனையை உடைத்த பாபர் அசாம்

Babar Azam: 32 ஆண்டு கால சாதனையை உடைத்த பாபர் அசாம்

ரிஸ்வான் - பாபர் ஆசம்

ரிஸ்வான் - பாபர் ஆசம்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த பாகிஸ்தான் கேப்டன் இம்ரான் கானின் 32 ஆண்டுகால சாதனையை பாபர் முறியடித்தார். 1990ல் கேப்டனாக இருந்த இம்ரான் பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 82 ரன்கள் எடுத்திருந்தார். அதுதான் பாகிஸ்தான் கேப்டன் ஒருவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

மேலும் படிக்கவும் ...
    பாபர் அசாம் தனது சதத்தின் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு பாகிஸ்தான் கேப்டன் செய்த 32 ஆண்டுகால சாதனையை முறியடித்தார். லாஹூரில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 349 என்ற மிகப்பெரிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் அதிகபட்ச வெற்றிகரமான ரன் சேஸிங்கை நிறைவு செய்து வியாழன் (மார்ச் 31) தொடரை 1-1 என சமன் செய்தது. கேப்டன் பாபர் அசாம் (114) மற்றும் தொடக்க ஆட்டக்காரர் இமாம்-உல்-ஹக் (106) ஆகியோரின் சதங்கள், பேட்டிங்கிற்கு உதவிய ஒரு ஆடுகளத்தில் பாகிஸ்தான் இலக்கைக் கடக்கச் செய்தன.

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த பாகிஸ்தான் கேப்டன் இம்ரான் கானின் 32 ஆண்டுகால சாதனையை பாபர் முறியடித்தார். 1990ல் கேப்டனாக இருந்த இம்ரான் பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 82 ரன்கள் எடுத்திருந்தார். அதுதான் பாகிஸ்தான் கேப்டன் ஒருவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

    இமாம் மற்றும் ஃபக்கர் ஜமான் (67) 118 ரன்களுக்கு ஒரு தொடக்கத்தை கொடுத்து பாகிஸ்தானுக்கு உறுதியான அடித்தளத்தை வழங்கினர், மேலும் இமாம் மற்றொரு சத பார்ட்னர்ஷிப்பை கேப்டன் பாபர் அசாமுடனும் உருவாக்கினார்.



    கடைசி 10 ஓவர்களில் பாகிஸ்தான் இன்னும் 70 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது, அவர்கள் 45வது ஓவரில் பாபரை இழந்தனர், முகமது ரிஸ்வான் 23 ரன்களில் ஆட்டமிழக்க , தேவையான ரன் ரேட் அதிகரித்ததால் ரசிகர்களிடத்தில் கவலையான முகங்கள் காணப்பட்டன. ஆனால் குஷ்தில் ஷா (17 பந்தில் 27) ஒரு சிறு அதிரடி இன்னிங்ஸை ஆடி உற்சாகத்தை உயர்த்தினார், இரண்டு சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகளை அடித்து சமன்பாட்டை மாற்றி ஒரு ஓவர் மீதமிருக்கையில் பாகிஸ்தானை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

    முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று பாகிஸ்தான் வெற்றி பெற்று ஒரு நாள் தொடர் 1-1 என்று சமன் ஆகியது. கடைசி ஒருநாள் போட்டி லாகூரில் சனிக்கிழமை நடைபெறுகிறது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Babar Azam, Imran khan, Pakistan Vs Australia

    அடுத்த செய்தி