ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Pak vs Aus-ஆஸ்திரேலிய பந்து வீச்சின் ஆல் டைம் வீழ்ச்சி- அஞ்சிய பாகிஸ்தான்- செத்த பிட்ச் - கமின்ஸ் சாடல்

Pak vs Aus-ஆஸ்திரேலிய பந்து வீச்சின் ஆல் டைம் வீழ்ச்சி- அஞ்சிய பாகிஸ்தான்- செத்த பிட்ச் - கமின்ஸ் சாடல்

பாட் கமின்ஸ்

பாட் கமின்ஸ்

பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ராவல்பிண்டி டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வி இன்றி ஒரு மந்தமான ட்ராவில் முடிந்துள்ளது. கிட்டத்தட்ட 1200 ரன்கள் குவிக்கப்பட்டாலும் விழுந்த விக்கெட்டுகள் 14 தான். இமாம் உல் ஹக் 2 இன்னிங்ஸ்களிலும் சதம், 2வது இன்னிங்ஸில் தொடக்க வீரர் அப்துல்லா ஷபிக் 136 பாகிஸ்தான் 252/0 என்ற நிலையில் ட்ரா ஆனது. இப்படிப்பட்ட செத்த டெஸ்ட் மேட்ச் சமீப காலங்களில் எங்கும் நடந்ததில்லை.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ராவல்பிண்டி டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வி இன்றி ஒரு மந்தமான ட்ராவில் முடிந்துள்ளது. கிட்டத்தட்ட 1200 ரன்கள் குவிக்கப்பட்டாலும் விழுந்த விக்கெட்டுகள் 14 தான். இமாம் உல் ஹக் 2 இன்னிங்ஸ்களிலும் சதம், 2வது இன்னிங்ஸில் தொடக்க வீரர் அப்துல்லா ஷபிக் 136 பாகிஸ்தான் 252/0 என்ற நிலையில் ட்ரா ஆனது. இப்படிப்பட்ட செத்த டெஸ்ட் மேட்ச் சமீப காலங்களில் எங்கும் நடந்ததில்லை.

  145 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத புதிய வீழ்ச்சியை ஆஸ்திரேலிய பவுலிங் சந்தித்துள்ளது. ஆஸ்திரேலிய பவுலர்களின் இந்த டெஸ்ட் மொத்த சராரசி 238.33 , அதாவது இத்தனை ரன்களுக்கு ஒரு விக்கெட் என்ற வீதம். ஸ்ட்ரைக் ரேட் இன்னும் மோசம், 478 பந்துக்கு ஒரு விக்கெட். பாகிஸ்தானுக்கும் இது நடந்தது. கேரி சோபர்ஸ் 365 நாட் அவுட்டின் போது பாகிஸ்தான் பவுலிங் சராசரி, ஸ்ட்ரைக் ரேட் இதைப்போல்தான் இருந்தது என்கின்றன புள்ளி விவரங்கள்.

  இந்நிலையில் ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கமின்ஸ் கூறும்போது, “ராவல்பிண்டி பிட்ச் மரபான பிட்ச் கிடையாது. எங்கள் வேகப்பந்து வீச்சுக்கு பயந்து போய் இப்படி செத்த ஆட்டக்களத்தை அமைத்துள்ளனர். ஆனால் நான் பாசிட்டிவ் ஆகவே பார்க்கிறேன். இந்த துணைக்கண்ட சூழ்நிலைமைகளில் ட்ரா ஆவது நல்ல விஷயமாகவே படுகிறது.

  நாங்கள் பந்து வீச்சில் வித்தியாசமான சில முயற்சிகளை செய்தோம். நாங்கள் ஒவ்வொருவரும் 25-30 ஓவர்களை தனிப்பட்ட முறையில் வீசினோம். இது ஆஸ்திரேலிய டெஸ்ட் மேட்ச்களை விட குறைவான பணிச்சுமையே. பெரிய ரிவர்ஸ் ஸ்விங் இல்லை. அடுத்த டெஸ்ட்டில் இருக்கலாம். ஆனால் பெரிய சேதமில்லாமல் அனைவரும் இந்த டெஸ்ட் போட்டியை ட்ரா செய்தது மகிழ்ச்சியே.

  "பாகிஸ்தான் பேட்டர்கள் முழு ஆட்டத்திலும் நன்றாக பேட் செய்தார்கள் என்று நான் நினைத்தேன்,. "தாங்கள் செட்டில் ஆன பின்னர் அவர்கள் தங்களை உள்ளே நுழைத்துக் கொண்டவுடன் அவர்களால் பெரிய ஸ்கோர்களை எடுக்க முடிந்தது.

  "அடுத்த இரண்டு நாட்களை நாங்கள் கராச்சிக்கு முன்னால் வெவ்வேறு திட்டங்களை மதிப்பாய்வு செய்வோம், ஒருவேளை வெவ்வேறு பிட்ச் உள்ளிட்ட நிலையையும் எதிர்பார்க்கிறோம்.” என்றார் கமின்ஸ்.

  2015 க்குப் பிறகு முதல்முறையாக முதல் நான்கு பேர் அரைசதம் கடந்ததும், உஸ்மான் கவாஜாவும் டேவிட் வார்னரும் 156 ரன்களின் தொடக்க நிலைப்பாட்டை பகிர்ந்து கொண்டதன் மூலம் கம்மின்ஸ் தனது சொந்த அணியின் பேட்டிங் செயல்திறன் குறித்து மகிழ்ச்சி அடைந்தார். மேற்பரப்பின் தன்மையைக் கருத்தில் கொண்டு, ஆஸ்திரேலியாவின் பேட்டர்கள் அவர்கள் செய்ததை விட இன்னும் அதிகமாக செழித்திருக்கலாம் என்று கூறலாம். முதல் நான்கு பேரில் யாரும் பெரிய சதங்களை எடுக்கவில்லை. மேலும் நான்கு பேரும் முக்கியமாக அவர்கள் செய்த தவறுகளில் விழுந்தனர் என்றார் கமின்ஸ்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Pakistan Vs Australia, Pat Cummins