ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

’’இந்தியாதான் ஜெயிக்கணும்.. ஃபைனல்ல பாக்கணும்’’ - ஆசையைச் சொன்ன பாகிஸ்தானின் வைரல் ரசிகை!

’’இந்தியாதான் ஜெயிக்கணும்.. ஃபைனல்ல பாக்கணும்’’ - ஆசையைச் சொன்ன பாகிஸ்தானின் வைரல் ரசிகை!

இணையத்தில் வைரலான பாகிஸ்தான் ரசிகை நடாஷா

இணையத்தில் வைரலான பாகிஸ்தான் ரசிகை நடாஷா

பாகிஸ்தான் -நியூசிலாந்து அணிகளுக்கு இடையே சிட்னியில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் ரசிகை ஒருவர் மைதானத்தில் இருந்தது இணையத்தில் வைரலானது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்தியா -பாகிஸ்தான் இறுதி போட்டியை கான விரும்புவதாக மைதானத்தில் வைரலான பாகிஸ்தான் ரசிகை விருப்பம் தெரிவித்துள்ளார்.

  ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த் போட்டியை சிட்னி மைதானத்தில் கான வந்த பாகிஸ்தான் ரசிகை ஒருவர் இணையத்தில் வைரலானார்.

  இதையும் படிங்க: INDvsENG Live Updates | முதல் விக்கெட்டை பறிகொடுத்த இந்தியா

  இதனையடுத்து அந்த பாகிஸ்தான் பெண் யார் அவரின் சமூகவலைதள பக்கத்தை கட்டுப்பிடித்து அவரை பின் தொடர்ந்து வருகின்றனர். இறுதியில் அந்த பாகிஸ்தான் ரசிகை யார் என கண்டுபிடித்து விட்டனர். அவரின் பெயர் நடாஷா என தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தானுடன் இறுதி போட்டியை விளையாட வேண்டும் என்றும் நம்பிக்கையுடன், இந்தியா இறுதிப் போட்டிக்கு வரும். நாம் அவர்களை வீழ்த்த வேண்டும். பாகிஸ்தான் உலகக் கோப்பைக்கு செல்கிறது," என்று நடாஷா கூறி உள்ளார்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: India vs Pakistan, T20 World Cup