• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • லைவ்வில் அவமதித்ததற்காக சோயிப் அக்தரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்!

லைவ்வில் அவமதித்ததற்காக சோயிப் அக்தரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்!

shoaib akhtar

shoaib akhtar

சோயிப் தான் எங்கள் நிகழ்ச்சியின் நட்சத்திரம், சர்வதேச பிரபலங்கள் இருந்த போது அப்படி ஒன்று நடந்திருக்க கூடாது

  • Share this:
டிவி நேரலை நிகழ்ச்சியில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தரை அவமதித்ததற்காக, பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார் நிகழ்ச்சி தொகுப்பாளர் நவுமன் நியாஸ். அந்த நேரலை நிகழ்ச்சியில் இருந்து சோயிப் அக்தர் பாதியில் வெளியேறியிருந்தார்.

நடைபெற்று வரும் உலக கோப்பை டி20 தொடரில் கடந்த அக்டோபர் 27ம் தேதியன்று நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடி வெற்றி பெற்றது பாகிஸ்தான். அன்றைய தினம் போட்டி முடிந்த பின்னர் பாகிஸ்தானின் பிடிவி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் சோயிப் அக்தர், விவியன் ரிச்சர்ஸ், டேவிட் கோவர், உமர் குல், பாகிஸ்தானின் மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் சனா மிர் உள்ளிட்ட முன்னாள், இந்நாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி நேரலையாக நடந்தது. அந்த நிகழ்ச்சியில் அன்றைய போட்டி குறித்து பல்வேறு கருத்துக்களை விருந்தினர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அந்நிகழ்ச்சியை நவுமன் நியாஸ் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.

இதனிடையே நியூசிலாந்த் அணியை, பாகிஸ்தான் அணி சரிவர சேஸிங் செய்ததா என நவுமன் நியாஸ், சோயிப் அக்தரிடம் கேட்டபோது, அன்றைய தினம் சிறப்பாக பந்துவீசிய ஷாகீன் ஷா அஃப்ரிடி மற்றும் ஹரிஸ் ரஃவுப் குறித்து புகழ்ந்து பேசிய அக்தர், இருவரையும் கண்டறிந்ததற்காக லாகூர் கலந்தர்ஸ் டி20 அணி நிர்வாகத்தை பாராட்டினார்.

Also read:    பணத்துக்காக மகளை விபச்சார கும்பலுக்கு விற்பனை செய்த காதலனை கொலை செய்து பழிதீர்த்த தந்தை – நெட்டிசன்கள் பாராட்டு!

அக்தரின் பேச்சினால் கடுப்பான தொகுப்பாளர் நவுமன் நியாஸ், உங்கள் பேச்சு திமிராகவும், அடாவடித்தனமாகவும் இருக்கிறது, அனைவர் முன்னிலையிலும், ஆன் ஏரிலும் இதனை சொல்கிறேன், நீங்கள் மைக்கை கழற்றி வைத்துவிட்டு இங்கிருந்து வெளியேறலாம் என்றார். நிகழ்ச்சி தொகுப்பாளரின் இந்த பேச்சை சற்றும் எதிர்பார்க்காத அக்தர், உங்கள் பேச்சுக்காக மன்னிப்பு கேட்பதாக இருந்தால் நிகழ்ச்சியில் தொடருவதாக தெரிவித்தும் அவர் மன்னிப்பு கேட்காததால் உடனடியாக மைக்கை கழற்றிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. மேலும் அக்தருக்கு ஆதரவாக பலரும் கருத்துக்கள் பதிவிட்டு வந்தனர். இந்த சம்பவத்துக்கு பின்னர் அக்தர், நவுமன் நியாஸ் என இருவரையும் சேனல் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது,

Also read:  முக்கிய சீன அரசியல் பிரபலம் மீது நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை பரபரப்பு செக்ஸ் புகார்

இந்நிலையில், ரவுஃப் கலாஸ்ரா என்ற ஊடகவியாலருடன் யூடியூப் நிகழ்ச்சியில் கலந்துரையாடிய நவுமன் நியாஸ் நடந்த சம்பவத்துக்காக மன்னிப்பு கோரியிருக்கிறார். அந்த வீடியோவில் அவர் பேசுகையில், “அன்று நடந்தது ஒரு மாபெரும் தவறு. தவறிழைப்பது மனிதர்களிடையே இயல்பான ஒன்று. நான் அவரிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். ஒரு முறை அல்ல, மில்லியன் முறை மன்னிப்பு கேட்பேன், சோயிப் அக்தர் ஒரு நட்சத்திரம், கேமரா முன் நடந்தவற்றை மாற்ற முடியாது. என் தந்தை கூட மன்னிப்பு கேட்குமாறு கூறினார்.

நான் வெறும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்று மட்டுமே மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், சோயிப்பின் சம்பள ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது கூட நான் தான். சோயிப் தான் எங்கள் நிகழ்ச்சியின் நட்சத்திரம், சர்வதேச பிரபலங்கள் இருந்த போது அப்படி ஒன்று நடந்திருக்க கூடாது” இவ்வாறு நவுமன் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: